சென்னை: பாடலாசிரியர் சிநேகன் ரஜினிகாந்த் தொடங்க உள்ள புதிய கட்சிக்குச் செல்வார் என தகவல் வெளியாகியுள்ளது.
கமல் கட்சிக்கு டாடா..! ரஜினி கட்சிக்கு தாவுகிறாரா கவிஞர்..! அவரே வெளியிட்ட தகவல் உள்ளே..!
தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களை எழுதியவர் சிநேகன். இதுதவிர, இவர் சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றதன் மூலமாக, தமிழ் மக்களிடையே பிரபலமடைந்த சிநேகன், கமல் ஹாசன் தொடங்கிய கட்சியில் இணைந்து, அரசியல் பணி செய்து வருகிறார்.
அத்துடன், சமீபத்தில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில், சிவகங்கை தொகுதியில் சிநேகன் போட்டியிட்டு, 5வது இடம் பிடித்தார். இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சிநேகன், ''ரஜினி புதியதாக தொடங்க உள்ள கட்சியில் நான் இணைய உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
அது உண்மையில்லை. நான் என்று கமல்ஹாசனின் ரசிகன். அவரை மட்டுமே தலைவணங்குகிறேன். அவரது கட்சியில்தான் நிரந்தரமாக இருப்பேன்,'' என்றார்.