வீட்டுப் பக்கம் யார் யாரோ வர்றாங்க..! பயமா இருக்கு! கதறும் பிக்பாஸ் காயத்ரி! அதிர்ச்சி காரணம்!

பிரபல நடிகை காயத்ரி ரகுராம், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் தனக்கு காவல் துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனு அளித்துள்ளார்.


நடிகை மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான காயத்ரி ரகுராம், சமீபத்தில் இந்து கோவில் சிலைகள் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார்.  

இந்த நிலையில், காயத்திரி ரகுராம் ட்விட்டரில் திருமாவளவனை சரமாரியாக விமர்சித்து பதிவிட்டிருந்தார். காயத்திரி கருத்துக்கு அரசியல் கட்சியினரிடம் இருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்தன.

மேலும், விசிக மகளிர் அணியினர் காயத்ரி ரகுராம் வீட்டை முற்றுகையிட்டு போராடினர். இதனையடுத்து, காயத்ரி ரகுராம் மீது வன்கொடுமை பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. 

இந்த பிரச்சனையை அடுத்து, காயத்ரி ரகுராம் அவர்களுக்கு சமூக வலைதளங்கள் மற்றும் தொலைபேசிகள் மூலம் மர்மநபர்கள் தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து உள்ளார்கள். தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து அச்சுறுத்துவதாக புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து, காயத்ரி ரகுராம் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் வந்த தனது வீட்டிற்கு வெளியிலும் மர்மநபர்கள் உலாவுவதால் தனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்துள்ளார்.