பின்னழகில் தட்டுவார்..! கால்களை தடவுவடார்..! ட்யூசன் வாத்தியரால் பிரபல நடிகைக்கு ஏற்பட்ட பகீர் அனுபவம்! தாயார் வெளியிட்ட தகவல்!

மும்பை: சிறுவயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக பிக் பாஸ் போட்டியாளர் ஒருவர் கண்ணீர் சிந்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பிக் பாஸ் 13 சீசன் நிகழ்ச்சி இந்தியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பங்கேற்ற போட்டியாளர்கள், தங்களது வாழ்வில் நடைபெற்ற மறக்க முடியாத முற்றிலும் எதிர்பாராத சம்பவங்கள் சிலவற்றை பகிர்ந்துகொள்ளும்படி டாஸ்க் தரப்பட்டது. இதன்படி, போட்டியாளர்களில் ஒருவரான மதுரிமா துலி, சிறுமியாக இருந்தபோது, டியூசன் டீச்சர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். இது நிகழ்ச்சியை பார்த்த பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.  

இந்த தகவலை மதுரிமாவின் தாய் விஜயா பண்ட் உறுதி செய்துள்ளார். அவர் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ''எனது மகள் 6வது படிக்கும்போது, அதாவது அவளின் 12 வயதில் இத்தகைய பாதிப்பை சந்தித்தார். இதனை நாங்கள் வெளியே சொல்லாமல் மறைத்து வந்தாலும், தற்போது அனைவருக்கும் தெரிந்துவிட்டது.

எனினும், எங்களிடம் இதனை நிரூபிக்கத் தேவையான ஆதாரம் இல்லை. அதனால், அந்த நபரை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க முடியவில்லை,'' எனக் குறிப்பிட்டுள்ளார். இதேபோல, பிக் பாஸ் 13 சீசனின் மற்றொரு போட்டியாளர் ஆர்த்தி சிங், தானும் சிறுவயதில் பாலியல் சீண்டலை சந்திக்க நேரிட்டதாகக் கூறினார்.