சேரனுக்கு ஆதரவாக குரல் தரும் கமல் - மீராவுக்குச் சிக்கலா? பிக்பாஸ் கலாட்டா

பிக் பாஸ் வீட்டின் இந்த வார பிரமோ வெளியாகியதில் கமல் ஹாசன் சேரனுக்காக வரிந்து கொண்டு பிராது கொடுக்க கிளம்பும் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.


இதில், கிராம சபைகளை நாங்க ஒருப்புறம் ஊக்குவித்து வரும் வேளையில், இன்னொரு பக்கம் நாட்டாமை மீதே பிராது கொடுத்து அவரையே குற்றம் சொல்வது ஆதரிக்க கூடியதா என்று கமல் கேள்வி எழுப்புகிறார்.

சேரனுக்காக ஒரு சக கலைஞராக, அரசியல் கட்சித் தலைவராக கமல் குரல் கொடுக்கிறார். அதுவும், நீங்க கொடுத்தால்தான் பிராதா ? நாங்களும் பிராது கொடுப்போம் என்று டென்ஷன் ஆக்குகிறார்.

இதன் மூலம் வார கடைசியான இன்று மீராவிற்கு தரமான சம்பவம் நடைபெற உள்ளது என சேரன் ஆதரவாளர்கள் குஷியில் இருக்கிறார்கள்.  மீரா ஒரு நபருடன் மிக இணக்கமாக நடனம் ஆடக்கூடிய காட்சிகளை வைரலாகி அதன் மூலமாகவும் சேரனுக்கு ஆதரவாக குரலை பதிவு செய்கின்றனர்.

இது, சேரன் ஆதரவு அலையாக இருந்தாலும்கூட, உண்மையில் இது மீராவிற்கு எதிர்ப்புதானா? 

பார்த்துடலாம்