மகளை கடத்திய வழக்கு! போலீஸ் விசாரணையில் புதிய ட்விஸ்ட்! பிக் பாஸ் வீட்டில் வனிதா நீடிப்பதில் சிக்கல்!

மகளை கடத்திய வழக்கில் போலீஸ் விசாரணையின் போது ஏற்பட்ட ட்விஸ்ட் காரணமாக பிக்பாஸ் வீட்டில் வனிதா நீடிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.


தனது இரண்டாவது கணவர் ஆனந்த் ராஜன் மூலமாக பிறந்த குழந்தையை யார் வளர்ப்பது என்பதில் தான் பிரச்சனை ஏற்பட்டது. ஐதராபாத்தில் தன்னுடன் வனிதாவின் குழந்தையை ஆனந்தராஜ் வைத்திருந்தார். அவ்வப்போது அங்கு சென்று குழந்தையை பார்த்து வந்தார் வனிதா.

இந்த நிலையில் கடந்த முறை அங்கு சென்ற போது குழந்தையை தன்னோடு வனிதா அழைத்து வந்துவிட்டார். குழந்தைக்காக வனிதாவும் – ஆனந்தராஜூம் மோதிக் கொள்வது குழந்தை மீதான அக்கறையில் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

தாத்தா விஜயகுமார் சொத்தில் பேத்திக்கு உரிமை உள்ளது என்பதால் அவர் மூலமாக சொத்துகளை அடையேவே வனிதா மற்றும் ஆனந்தராஜ் இந்த நாடகத்தை அரங்கேற்றி வருகின்றனர். அந்த குழந்தையின் படிப்பு உள்ளிட்ட எதை பற்றியும் கவலைப்படாமல் குழந்தையை யார் கஸ்டடியில் வைத்திருபப்து என்பது தான் இவர்களின் நோக்கமாக உள்ளது.

இதன் அடிப்படையில் மகளை வனிதா கடத்திச் சென்றுவிட்டதாக ஐதராபாத் போலீசிடம் ஆனந்தராஜ் புகார் அளித்திருந்தார். இதன் அடிப்படையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் வனிதாவிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது. இறுதியில் குழந்தையை அழைத்து வருவதாகவும் அவர் விருப்பப்பட்டால் ஆனந்தராஜ் அழைத்துச் செல்லாம் என்று வனிதா கூறினார்.

இதன் அடிப்படையில் மனித உரிமைகள் ஆணைய அதிகாரி முன்னிலையில் குழந்தையிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தான் வனிதாவுடன் இருக்க விரும்புவதாக குழந்தை கூறியுள்ளது. இதனால் குழந்தையை கவனிக்க வேண்டிய பொறுப்பு வனிதாவுக்கு ஏற்பட்டுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் இருந்து மகளை யார் கவனிப்பது என்று ராஜன் கேள்வி எழுப்ப. தான் வீட்டை விட்டு வெளியே வர தயார் என்று வனிதா கூறியுள்ளதாக சொல்கிறார்கள். இதனால் பிக்பாஸ் வீட்டிற்குள் வனிதா தொடரமாட்டார் என்று கூறுகிறார்கள்.