முதலில் கவின்! இப்போ முகைன்! அபிகிட்ட அப்டி என்ன இல்லனு இப்டி செய்றாங்க? பிக்பாஸ் பஞ்சாயத்து!

பிக் பாஸ் வீட்டின் காதல் ஜோடியாக இருந்த கவினும் சாக்‌ஷியும் இப்போ கொஞ்சம் அடிக்கடி முட்டிக்கிறதுனால ,அடுத்த காதல் ஜோடியாக வலம் வருவது நம்ம முகைன் - அபி தான்,


வந்த முதல் நாளே கவினை காதலிப்பதாக சொன்ன அபி, கவினை கழட்டி விட்டு தர்ஷனை பிக்கப் செய்ய பார்த்ததும், நடுவில் செரின் வர, சுதாரித்துக் கொண்ட அபி விலகினார்.

இதனை அடுத்து மிச்சமாக அங்கிருப்பது, சாண்டியும் சேரனும் என்றாலும் முகைன் மீதான காதல் அபிக்கு அரும்பு மலர, தீவிரமான காதலில் இறங்குகிறார், அபி

இருவரும் வீட்டிற்க்குள் சுற்றுவதும், தனியாக பேசிக்கொள்வது என செய்த சேட்டைகளுக்கு அளவில்லை, என்றாலும், கமல் முகனை ஏன் முன்னாடி வர மாட்டுறீங்க,?

உங்க செயல்பாடு வீட்டில் மிக குறைவாக உள்ளதே என கேள்வி எழுப்ப காண்டான முகைன் சாண்டியிடம், நான் எனக்கு ஆள் இருக்குன்னு முன்னாடியே சொல்லிட்டேன்.

அவளுக்கு தான் காத்திருக்கேன், அவள் என்ன சொல்லியும் கேட்காமல், அவளாம் ஒன்னும் இல்ல எனக்கு, நான் மறக்க கொஞ்சம் நாளாகும் அப்படி ,இப்படினு சொல்லிட்டு என் பின்னாடி தான் சுத்துறா

நான் சொல்லிட்டேன், அவ சுத்திட்டுறுந்தா எனக்கு தெரியாது அப்படின்னு பொறுப்பு துறப்பு செய்யும் காட்சிகள் மற்ற ஹவுஸ் மேட்ஸ் முன்னிலையில் முகைன் தப்பித்துக் கொள்ள முயன்றாலும், அபிக்கு முன்னதாக அவர் பெரிதாக எதுவும் காண்பித்து கொள்வது இல்லை என்பது தான் நிதர்சனம்.