அடியே லாஸ்லியா! நீ என்ன காஸ்ட்லியா? ஆளை மாற்றிய பிளே பாஸ் கவின்!

காதல் மன்னன் கவின் முதற்கட்டமாக கண்டவுடன், காதலில் விழுந்த அபிராமியை கட்டி தழுவ பின்னர் அந்த லிஸ்ட்- சாக்‌ஷி, ஷெரின் என நீண்டு தற்போது கடைசியாக லாஸ்லியா பக்கம் திரும்பியுள்ளார்.


நேற்றைய பிக்பாஸில் , மதுமிதா- வனிதா உள்ளே கட்டி உருண்டு சண்டையிட மற்றொரு பக்கம் வெளியில் லாஸ்லியா ஆட, தாளம் தட்டி கவின் பாடிக்கொண்டிருந்தார். வழக்கமாக ஆடிப்பாடுவது லாஸ்லியாவின் இயல்புதான் என்றாலும், நேற்றைய சம்பவம் லாஸ்லியாவை கன்னம் சிவக்க வைத்தது.

அடியே லாஸ்லியா! நீயென்ன காஸ்ட்லியா? என கவின் சொந்த வரிகலைப்போட்டு தனக்கான மனம் விருப்பத்தை அப்படியே பாடலாக பாடிவிட்டார். ஒருபக்கம் ஷாக்சி, அபி என சுற்றினாலும் மற்றொருபக்கம் கவின் லாஸ்லியாவிற்க்கும் நூல் விடுவதை யாராலும் மறுக்க முடியாது.

இதற்கிடையில் தாளம் தட்டிக்கொண்டு கவின் பாட செய்வதறியாமல், லாஸ்லியா ஆடுவதை நிறுத்திக்கொண்டு வெக்கத்தில் கன்னம் சிவந்தார். ஒருப்பக்கம் லாஸ்லியா ஆர்மி கவின் மீது கொந்தளித்தாலும், லாஸ்லியாவின் சிரிப்பிற்க்காக கவினை விட்டுவைத்துள்ளனர்

இதனிடையே லாஸ்லியாவுக்காக கவின் பாடிய பாடல் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி டிரெண்டாகியுள்ளது. லாஸ்லியா ஆர்மி அந்த பாடலை கொண்டாடி வருகின்றனர்.