வாத்து வனிதா ! வாங்கி கட்டிய கஸ்தூரி! பிக்பாஸ் வீட்டில் ரகளை!

பிக் பாஸ் வீட்டில் முதல் நாளில் இருந்தே வனிதா கஸ்தூரி இடையான கருத்து மோதல்கள் ஓய்ந்த பாடில்லை மற்ற ஹவுஸ் மேட்ஸ் தவிர்த்து இருவருக்கும் ஆன பனிப்போர் முடிந்த பாடில்லை,


கடந்த வாரம் இதை நம்மவர் - கமல் ஹாசன் உட்பட பஞ்சாயத்து செய்தும் கூட எந்த சுமூக முடிவும் எட்டபடாத நிலையில் புகைந்த படி இருந்து வந்த பனிப்போர்,

நேற்றைய லக்சரி பட்ஜெட்டில் முத்தியது, அதிலும் டீச்சராக இருந்த கஸ்தூரி முதல் பாதியில் சரியாக பர்பாமன்ஸ் கொடுக்க அடுத்த பாதியில், செய்த சின்ன தவறு தான் மொத்த மெணக்கெடுத்தலையும் சறுக்கி விட வைத்துள்ளது.

கஸ்தூரி ரைம்ஸ் சொல்லி கொடுத்த போது வனிதாவை வாத்து என நக்கல் எடுத்து சீண்ட, கடுப்பான வனிதா அங்கேயே அதற்கு போர்க்கொடி தூக்கி, டீச்சர் அதாவது கஸ்தூரி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்த,

வேறு வழியில்லாமல் சிக்கி தவித்த கஸ்தூரி முடிந்த வரை சமாளித்தும் கூட கடைசியாக அவர் மன்னிப்பு கேட்டார், மேலும் இது தொடர்பாக டாஸ்க் முடிந்த  பின்னர் கூட கஸ்தூரி ஆரம்பிக்க அதற்கு சரியான நிஸ் கட் கொடுத்துள்ளார் வனிதா