முதல் நாள் துவங்கி லாஸ்லியா தனக்கான இடத்தை ரசிகர்கள் மத்தியில் மிக நேர்த்தியாக பெற்றிருந்தார்.
அவளா நீ? லாஸ்லியாவை வேவு பார்க்கும் அபிராமி! பிக்பாஸ் வீட்டில் புது ட்விஸ்ட்!
அதிலும் அவரது நடத்தை மற்றும் கள்ளம் கபடமற்ற குணம் தமிழக மக்களிடத்தில் அவருக்கான தனி வரவேற்பைப் பெற்று தந்தது எனலாம். எல்லோரிடமும் அன்புடனும் மிக ஆரோக்யமாக பழக அணுக கூடிய நபர் லாஸ்லியா வீட்டின் நபர்களுக்கு எப்போதும் செல்லப்பிள்ளை.
இதற்க்கிடையில் 10 ஆம் நாள் நிகழ்ச்சியில் மது மீதான தனிப்பட்ட தாக்குதலை உணர்ந்த லாஸ்லியா, அவர்களை அமைதியாகும் படி கேட்க வழக்கம் போல அவர் மீதும் சீறிப்பாய்கிறார் வனிதா, இதனால் அதிர்ந்து போன லாஸ்லியா உடனடியாக அங்கிருந்து நகர்ந்து விடுகிறார்.
வீடு தற்போது இரண்டாக பிரிந்து இரு குழுவாக மாறியது மேலும் லாஸ்லியா தான் இரு பக்கமும் பேசுகிறார் எனவே இங்கு நடப்பதை எல்லாம் அவர் தான் அங்கு பரப்பி விடுகிறார் என அபிராமி கொளுத்தி போட அந்த அணியின் கவனம் லாஸ்லியா மீது விழுகிறது.
இதுவரை கியூட்னஸ் ஓவர்லோடாக காண்பிக்கபட்ட லாஸ்லியா திடீரென மாறாக சித்தரிக்கபடுவது சர்ச்சையை கிளப்பியுள்ளது .