கைப்பிள்ளை என கலாய்த்த பாத்திமா பாபு! கண்ணீர்விட்டு கதறிய மோகன் வைத்யா!

நேற்றைய எலிமினேஷனில் பிரியா விடைக் கொடுத்து அனைவரையும் உணர்ச்சி பெருக்கில் ஆழ்த்தினார் பாத்திமாபாபு,


பிக்பாஸ் நிகழ்ச்சி டிசைனை பொறுத்த வரை அமைதியாக தானுண்டு தன் வேலையுண்டு என அமைதியால இருக்கும் நபர்களுக்கு மாஸ் குறைவுதான்.மேலும் அவர்கள் எந்த நேரத்திலுல் வீட்டில் இருந்து வெளியேற்றபடலாம் அதனை ஒட்டிதான் பாத்திமா பாபு வெளியேற்றம் அமைந்து இருந்தது.

இதற்கிடையில் வீட்டை விட்டு வெளியேறிய பாத்திமா விடம் கமல் வீட்டு நிலவரம் குறித்து கேட்க, வனிதா தான் சொல்வது தான் சட்டம் என சத்தத்தை உயர்த்தி தான் நினைப்பதஒ.சாதிக்க நினைக்கிறார் எனவும், சேரன் தனக்கான போக்கில் இருந்து மாற்பட்டு எனக்கு ஏன் வம்பு என ஒதுங்கினிருப்பதாகவும் அதிருப்தி தெரிவித்தவர்,

மோகன் வைத்யா, நான் அவருக்கு சொல்லிக்கொடுத்த பல விஷயங்கள் கோவத்தை வரவழைத்துள்ளதாக கூறுவது, அதிர்ச்சி அளிப்பதாகவும், நல்ல விஷயங்களைப் பாராட்ட தான் என்றுமே தவறியதும் இல்லை என்ற பாத்திமா பாபு,

மோகன் எடுப்பார் கைப்பிள்ளையாக அதிக பெரும்பான்மையாக இருக்க கூடியவர்களுடன் தானாக சென்று நெருக்கம கட்டுவதாக அதிருப்தி தெரிவித்தார்.