முதல் ஆளாக பாத்திமா பாபு எலிமினேட் ஆனது ஏன்? சாக்சி தப்பியது எப்படி? இது தான் உண்மையான காரணம்!

பிக்பாஸ் சீசன் 3ன் முதல் ஆளாக பாத்திமா பாபு எலிமினேட் ஆகியிருப்பது ஏன் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.


பத்து கோடி பேர் வாக்களித்ததாகவும் அதன் முடிவாக பாத்திமா பாபு பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆகியிருப்பதாகவும் கமல் நேற்று நிகழ்ச்சியில் கூறினார். இது கேட்பன் கேனையனாக இருந்தால் எலி ஏரோபிளேன் ஓட்டும் என்பார்களாம் என்கிற பழமொழி தான் நினைவுக்கு வந்தது. 

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி முழுக்க முழுக்க ஏ கிளாஸ் மற்றும் பி கிளாஸ் ஆடியன்ஸ்களின் வரவேற்பை மட்டுமே பெற்றுள்ளது. கடந்த ஒரு வாரமாக இவர்கள் சமூக வலைதளங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி மாய்ந்து மாய்ந்து எழுதி வருகின்றனர். அதிலும் சாக்சிக்கு எதிராக இவர்கள் கூறிய கருத்துகள் உச்சகட்டம்.

இந்த அளவிற்கு ரசிகர்களின் எதிர்ப்பு மற்றும் அதிருப்தியை பெற்றுள்ள சாக்சி எலிமினேட் ஆகாமால் நேர்மையாக நடந்து கொள்கிறார் என்கிற பெயரை பெற்று இருந்த பாத்திமா வெளியேறியது அனைவருக்கும் அதிர்ச்சி. உண்மையில் இந்த எலிமினேசன் பிராசஸ் என்பது மக்கள் போடும் வாக்குகுளை அடிப்படையாக கொண்டதே இல்லை.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக செல்ல என்ன செய்ய வேண்டுமோ? அதனை செய்வார்கள்.அ ந்த வகையில் பிக்பாஸ் வீட்டிற்குள் அதிகம் கேமராவில் காட்டப்படாத நபராக இருந்தவர் பாத்திமா பாபு. ஏனென்றால் அவருக்கு சுயமாக மேக்கப் போட வராதாம். அவருக்கு என்று பிரத்யேக மேக்கப் கலைஞர் உண்டு.

தினந்தோறும் மேக்கப் இல்லாமல் பாத்திமாவை பார்க்க சகிக்கவில்லை, மேலும் அரைகுறையாக அவர் போடும் மேக்கப்பால் குளோஸ் அப் ஷாட்ஷே வைக்க முடியவில்லை என்று கேமர மேன்கள் கூறியுள்ளனர். மேலும் அவர் எந்த வம்பு தும்புக்கும் செல்லாமல் இருப்பதால் அவரால் எந்த பிரயோஜனமும் இல்லை என்று இப்படி ஒரு எலிமினேசன் நாடகத்தை நடத்தியுள்ளது பிக்பாஸ் டீம்.

பின்ன சாக்சிக்கு எல்லாம் வாக்களித்து வீட்டில் இருக்க வைத்திருப்பார்களா நம் மக்கள். சாக்சி போன்றவர்கள் வீட்டில் இருந்தால் தான் சண்டை நாறும் டிஆர்பி எகிறும் என்பது கூடவா விஜய் டிவிக்கு தெரியாது.