மீரா மிதுனிடம் தவறாக நடந்து கொண்டாரா சேரன்? பிக்பாஸ் வீட்டில் நடந்தது இது தான்!

சேரன் தன்னை தவறான எண்ணத்தில் தொட்டதாக மீரா மிதுன் கூறிய புகார் பிக்பாஸ் வீட்டை மட்டும் அல்லாமல் ரசிகர்களையும் அதிர வைத்துள்ளது.


கிராமம் போன்ற செட் போட்டு சேரனை நாட்டாமையாக்கி பிக்பாஸ் கொடுத்த டாஸ்கால் தற்போது வீடே பற்றி எரிந்து வருகிறது. இன்று திடீரென சேரன் தன்னுடைய இடுப்பை தொட்டதாக மீரா கூற அதிர்ச்சி ஏற்பட்டது.

இயல்பாக சேரன் தன்னுடைய இடுப்பை தொடவில்லை என்றும் அதில் தவறான எண்ணம் இருந்ததாக மீரா கொளுத்திப் போட வீடே பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. மீராவுக்கு எதிராக பலரும் சேரனை ஆதரித்து பேசி வருகின்றனர்.

அதே சமயம் இப்படி ஒரு குற்றச்சாட்டை மீரா கூறிய நிலையில் இனி என் மகள்கள் முன் நான் எப்படி நிற்பேன் என்று கேட்டு சேரன் கதறியது காண்போரை கதற வைத்தது. இதற்கிடையே உண்மையிலேயே சேரன் மீராவின் இடுப்பை தொட்டாரா என்கிற ஒரு கேள்வி எழுந்தது.

இது குறித்த வீடியோ வெளியிடப்பட்ட நிலையில் சேரன் கை எந்த இடத்திலும் மீராவின் இடுப்பிற்கு செல்லவில்லை. எனவே மீரா சேரன் மீது அபாண்டமான குற்றச்சாட்டை கூறியுள்ளதாக தெரிகிறது. எனவே இந்த வாரமும் ஒரு குறும்படம் இருக்கிறது.