பிக்பாஸ் கவின் யாருக்கு? போட்டி போட்டு கரெக்ட் செய்யும் சாக்சி – அபிராமி!

பிக்பாஸ் வீட்டிற்குள் கவினை வளைத்துப் போட நடிகை சாக்சி அகர்வாலும் பிரபல மாடல் அபிராமியும் போட்டா போட்டியில் உள்ளனர்.


பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் நாளிலேயே மாடல் அபிராமி தனக்கு கவின் மீது க்ரஸ் இருப்பதாக கூறி அதிர வைத்தார். அதாவது கவினை பார்த்த உடனேயே தனக்கு ஈர்ப்பு வந்துவிட்டதாக கூறியிருந்தார். 

அதாவது நடிகை ஷெரீனுடன் முதல் நாள் இரவு பேசிக் கொண்டிருந்த அபிராமி தான் கவின் மீது க்ரஸ்ஸாக இருப்பதாக கூற அப்போது அங்கு வந்த சாக்சி அதை கேட்டு அதிர்ச்சி அடைந்தார். அதற்கு காரணம் அப்போது தெரியவில்லை.

ஆனால் 2வது நாளில் தான் சாக்சிக்கும் கவின் மீது க்ரஸ் இருப்பது தெரியவந்தது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அபிராமி கவினுடன் பேசிக் கொண்டிருந்த போது சாக்சியும் வழியும் வகையில் பேசிக் கொண்டே இருந்தார். கவின் சாக்சியுடன் அதிகம் பேச அபிராமி டென்சன் ஆனார்.

அபிராமிக்கு செட் செய்து கொடுப்பதாக கூறிவிட்டு சாக்சி கவினை கரெக்ட் செய்யும் முயற்சியில் ஈடுபடுவது போல் தெரிகிறது. அதற்கு ஏற்ப கவின் இருக்கும் இடத்தில் சாக்சியை தவறாமல் பார்க்க முடிகிறது. 

இதனிடையே கவினை நேரடியாக சந்தித்து உன் மீது எனக்கு க்ரஸ் இருப்பதாக அபிராமி நேரடியாகவே கூறிவிட்டார். ஆனால் அதனை நேரடியாக ஏற்காமல் கவினும் அபிராமியுடன் பேசி வருகிறார். போகப்போகதான் தெரியும் இனி என்ன நடக்கும் என்று.