பிக் பஜார் நிறுவனம் துணிகள், காய்கறிகள் என அனைத்து தேவைகளுக்குமான ஒரே இடமாக இருப்பதால் கஸ்டமர்சுக்கு பஞ்சமில்லை. மேலும் அடிக்கடி பல ஆடர்களை அள்ளி கொடுப்பதிலும் கஸ்டமர் சாய்ஸ்.
ஒரு துணிப்பை ரேட் இவ்ளோவா? கேள்வி கேட்ட கஸ்டமருக்கு பிக் பஜாரில் கிடைத்த விபரீத அனுபவம்! உஷார் மக்களே!
இந்த நிலையில், கடையில் பொருட்கள் வாங்கிய பின்னர் கொண்டு செல்ல பை கேட்டவருக்கு , 18 ரூ வசூலித்துக்கொண்டு அந்த கடையின் விற்பனையாளர் துணிப்பயை கொடுத்துள்ளார். மேலும் துணி பைக்கு பணம் வசூலிப்பது குறித்து வாடிக்கையாளர் பல்தேவ் ராஜ் எழுப்பிய எந்த கேள்விக்கும் பதில் அளிக்காமல் இருந்துள்ளனர்.
இதனால அதிருப்தி அடைந்த பல்தேவ் நுகர்வோர் நீதிமன்றம் மூலமாக தனக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்க்காகவும் மன உளைச்சலுக்காகவும் வழக்கு தொடர, நீதிமன்றம் சரமாறி கேள்விகளால் பிக் பஜார் தரப்பினை துளைத்து எடுத்ததும் அல்லாமல், மேலும் வாடிக்கையாளர் மீது இவ்வாறு அதிக கட்டணைத்தை திணிப்பதையும் கண்டித்துள்ளது.
இதே போன்று கடந்த மாதம்.சண்டிகரில் நடந்த சம்பவத்திலும் பாதிக்கபட்டவருக்கு 11 ரூ கட்டணம் வசூலிக்கபட்டதால் 11,000 ரூ நஷ்ட ஈடாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டதும் குறிப்படதக்கது.