கணவனை தோளில் சுமந்து பலகிலோ மீட்டர் நடந்த மனைவி! கள்ளக்காதலனுடன் ஓடியதால் விபரீதம்!

காதலனுடன் ஓடிப்போன பெண்ணுக்கு பழங்குடியின மக்கள் அளித்த தண்டனை வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


மத்தியப் பிரதேச மாநிலம், தேவிகார் பகுதியைச் சேர்ந்த ஒரு 27 வயது பெண்ணுக்கே இப்படி தண்டனை கிடைத்துள்ளது. அந்த பெண், ஏற்கனவே திருமணமான நிலையில், குஜராத்தைச் சேர்ந்த ஒரு இளைஞரை காதலித்து வந்துள்ளார். சமீபத்தில், அந்த பெண், தனது கணவரை விட்டுவிட்டு, காதலனுடன் வீட்டை விட்டு ஓடிவிட்டார். 

அவரை சிலர் தேடிக் கண்டுபிடித்து, மீண்டும் கணவன் வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டனர். ஆனால், அங்கு வைத்துத்தான் ஒரு விநோத தண்டனை அளித்தனர். அதாவது, கணவனை தோள் மேலே சுமந்தபடி, அந்த பெண், நடக்க வேண்டும் என, அடித்து, துன்புறுத்தி உள்ளனர். அந்த பெண் நடக்க முடியவில்லை எனச் சொன்னபோது, அவரை கடுமையாக அடித்து, மிரட்டியுள்ளனர். 

இதுபற்றி போலீஸ்க்கு புகார் கிடைத்ததை அடுத்து, குறிப்பிட்ட பெண்ணை துன்புறுத்திய நபர்களில், 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுபற்றி மேலும் விசாரணை நடத்தி வருவதாக, போலீசார் தெரிவித்துள்ளனர்.