3 அதிரடி ஆக்சன் கதை ரெடி! இந்தியில் களம் இறங்கும் தல! ஸ்ரீதேவி கணவர் வெளியிட்ட செம தகவல்!

இயக்குனர் சிவாவிடம் நான்கு படங்கள் தொடர்ந்து நடித்ததை அடுத்து தற்போது தீரன் பட இயக்குனர் எச் வினோத்திடம் ஒரு படத்தில் நடித்து வருகிறார் தல அஜித்.


 இந்த படத்தினை பாலிவுட்டில் மிகப் பிரபலமான தயாரிப்பாளரும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் தயாரித்து வருகிறார். இந்த படத்திற்கு நேர்கொண்ட பார்வை என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்து சில நாட்களுக்கு முன்னர் அஜித் நடிக்கும் சீன்கள் படமாக்கப்பட்டது. அஜித் நடிக்கும் சீன்களை நேரே நின்று பார்த்த தயாரிப்பாளர் போனி கபூர் அதிர்ந்து போயுள்ளார். அவ்வளவு அற்புதமாக ஒரே டேக்கில் நடித்து கொடுத்துள்ளார் தல அஜித்.

 இதனை பார்த்து அதிர்ந்து போன தயாரிப்பாளர் போனி கபூர் அஜித்திடம் மூன்று கதைகளை கூறியுள்ளார். மூன்றுமே ஆக்சன் கதைகள். இதில் கண்டிப்பாக தல அஜித் ஒரு கதைக்கு ஒகே சொல்லுவார் எனவும் அவரை நான் அப்படியே பாலிவுட்டிற்கு தூக்கிச் சென்று விடுவேன் எனவும் கூறியுள்ளார் போனி கபூர்.