முடிஞ்சா மூனு கல்யாணம் பண்ணுங்க..! ஜெகனுக்கு சவால் விடும் 3 மனைவிக்கார நடிகர்!

ஐதராபாத்: 'நான் மட்டுமா, நீ கூட 3 முறை,' என்று ஜெகன் மோகன் ரெட்டியை பவன் கல்யாண் விளாசி தள்ளியுள்ளார்.


ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சமீபத்தில் ஜன சேனா கட்சித் தலைவரும், நடிகருமான பவன் கல்யாணை  காரசாரமாக விமர்சித்திருந்தார். அதாவது, ''மூன்று மனைவிகளை கொண்டவர் பவன் கல்யாண். அவருக்கு 4 அல்லது 5 குழந்தைகள் உள்ளனர். அந்த குழந்தைகளை அவர் எந்த மீடியத்தில் படிக்க வைக்கிறார்?,'' எனக் கேட்டிருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள பவன் கல்யாண், ''நான் சிலரை விமர்சிக்கும்போது, ஒவ்வொரு முறையும் அவர்கள் எனது 3 மனைவிகள் பற்றி விமர்சிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். எனக்கு பிடிக்கல, அதனால, மறுபடியும் திருமணம் செய்துகொண்டேன். அதுபோல, என்னை விமர்சிப்பவர்களும் மறுதிருமணம் செய்துகொள்ளலாம்.

தைரியம் இருந்தால் செய்யட்டும், யார் உங்களை தடுக்கிறார்கள்? அதிலும் என் திருமண வாழ்வு பற்றி அவருக்கு (ஜெகனுக்கு) ஏன் இவ்ளோ ஏமாற்றம்? நான் 3 முறை திருமணம் செய்துகொண்டதற்கும், ஜெகன் 2 ஆண்டுகள் சிறையில் இருந்ததற்கும் என்ன தொடர்பு? முதல்வராக இருந்தால் போதாது, முதலில் நாகரீகமாக பேச தெரிய வேண்டும் ,'' என்று சராமரியாக விமர்சித்துள்ளார்.

ஆந்திராவில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆங்கில மீடியத்தில் பாடங்கள் நடத்த அம்மாநில அரசு தீர்மானித்துள்ளது. தெலுங்கில் பாடம் நடத்தாமல் ஆங்கிலத்தில் நடத்துவதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.