பாரதிராஜாவின் ஹீரோ! ராதிகாவின் முதல் ஜோடி! மருத்துவமனையில் கவலைக்கிடம்!

அவர் பாரதிராஜா படக் கதாநாயகன் மட்டுமல்ல,திரைப்படக் கல்லூரியில் சிரஞ்சீவியின் கிளாஸ்மேட்,நடிகை ராதிகாவின் முதக் ஜோடி.1978 முதல் 1990 வரை தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஹீரோவாக வலம் வந்தவர்.


ஆமாம்,நடிகர் சுதாகர்தான் இத்தனை பெருமைகளுக்கு உரியவர்.பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் படத்தில் பாஞ்சாலி ராதிகாவின் காதலனான கவிஞன் பரஞ்சோதியாக அறிமுகமான சுதாகர் ஒரு தெலுங்கர்.சென்னை திரைப்பட கல்லூரி கேண்டீனில் பாரதிராஜாவின் கண்ணில் பட,தன் வகுப்புத்தோழரும் பிற்கால தெலுங்கு சூப்பர் ஸ்டாருமான சிரஞ்சீவிக்கு முன்பே சினிமாவில் அறிமுகமாகி விட்டார்.

அதுவும் பாரதிராஜாவின் படத்தில்.அவரது கள்ளம் கபடமற்ற முகமும் சுருண்ட ஹேர்ஸ்டைலும் என்பதுகளில் கிராமத்து பெண்களின் உள்ளங்கவர் நாயகனாக்கி விட்டன.அந்த வகையில் ராமராஜனின் முன்னோடி சுதாகர்தான்.கிழக்கே போகும் ரயிலைத் தொடர்ந்து,மாந்தோப்பு கிளியே,பொன்னு ஊருக்கு புதுசு,

மீண்டும் பாரதிராஜாவின் நிறம்மாறத பூக்கள்,பாக்கியராஜின் சுவரில்லாத சித்திரங்கள் , கல்லுக்குள் ஈரம் ,என்று வெற்றி மீது வெற்றியாக குவித்த சுதாகரால் அத்தனை சிறிய வயதில் இவளவு பெரிய வெற்றியை எதிர் கொள்ள முடியவில்லை. அந்த வெற்றியால் கிடைத்த பணம் , புகழ், போகும் இடமெல்லாம் வந்து குவியும் ரசிகைகள் எல்லாம் சேர்ந்து அவர் வாழ்க்கையை புரட்டிப் போட்டன.

படப்பிடிப்பிற்கு குடித்து விட்டு வருகிறார் என்று பத்திரிகைகள் எழுதின.1978ல் அறிமுகமான சுதாகர் மூன்றே வருடத்தில் ' தரையில் வாழும் மீனாகி' 1982ல் வந்த மாமியாரா மருமகளாவோடு ஓரம் கட்டப்பட்டு விட்டார்.அடுத்த 37 வருடங்களில் 2018ல் வந்த தானா சேர்ந்த கூட்டம் வரை தமிழில் நான்கே நான்கு படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார்.

தமிழில் வாய்ப்பிழந்த பிறகு தெலுங்கில் முயற்சித்த சுதாகருக்கு கதாநாயக வாய்ப்புகள் கிடைக்க வில்லை.கிடைத்த வாய்புகளை பயன்படுத்தி நகைச்சுவை நடிகராகி,உடல் பெருத்து விட்டதால்'பெந்த சுதாகர்' என்கிற பெயரில் சமீப காலம் வரை பரபரப்பாகவே நடித்துக்கொண்டு இருந்தார்.தற்போது உடல் நிலை மோசமடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.