விற்பனைக்கு வருகிறது பாரத் பெட்ரோலியம்? இந்தியாவில் அத்தனை துறைகளும் சடசட சரிவு!

கடந்த சில வாரங்களாக இந்திய பொருளாதாரம் மற்றும் குறியீட்டுகளைத் தொடர்ந்து. இறக்குமதிகள், ஏற்றுமதிகள் துறையும் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது என்கிற செய்தி மீண்டும் அரசின் அணுகுமுறைகளை சுய பரிசோதனை செய்ய உந்தப்படுகிறது.


நீடித்து வரும் பொருளாதார மந்தநிலை மற்றும் எண்ணெய் இறக்குமதியைக் கட்டுக்குள் வைத்திருப்பதால், ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை கொஞ்சம் தாக்குபிடித்தது எனலாம்.

கடந்த மாதம் ஜூலை மாதம் 13.43 பில்லியன் டாலர்களாக இருந்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் மதிப்பீடுகள் ஆகஸ்டு மாதத்தில் 13.45 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

இந்தியாவின் இறக்குமதி கடந்த ஒரு வருடத்தை கணக்கிடுகையில் 13.5 சதவீதம் குறைந்து 39.6 பில்லியன் டாலராக உள்ளது, இது கடந்த ஜூலை மாதத்தை ஒப்பிடுகையில் 10.4 சதவீத வீழ்ச்சியாகும்.

ஆகஸ்ட் மாதத்தில் ஏற்றுமதி 6.1 சதவீதம் சரிந்து 26.1 பில்லியன் டாலராக உள்ளது, கடந்த ஜுலை மாதத்தை ஒப்பிடுகையில் இது 2.3 சதவீதம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் மாதத்தில் ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலை சரிவு மற்றும் தங்கத்திற்கான தேவை குறைவு ஆகியவை இந்தியாவின் இறக்குமதி மசோதாவைக் கட்டுக்குள் வைக்க உதவியது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3% அரசின் பட்ஜெட்டில் காணப்படும் இடைவெளி மற்றும் இலக்கு வளர்ச்சியின் மந்தநிலையின் பின்னணியால். குறைந்த வருவாய் வசூல் காரணமாக இது உள்கட்டமைப்பு மற்றும் நலத்திட்டங்களுக்காக செலவழிக்கும் அரசின் போக்கை பாதிக்கிறது என்றும். நடப்பு நிதியாண்டில் மாநில நிறுவனங்களின் விற்பனையிலிருந்து 1.05 டிரில்லியன் ரூபாய் (14.8 பில்லியன் டாலர்) வரிகளாக திரட்ட இலக்கை நிர்ணயித்துள்ளது மத்திய அரசு.

இந்நிலையில் நாட்டின் இரண்டாவது பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் எரிபொருள் சில்லறை விற்பனை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனின் பங்குகளை உலகளாவிய எண்ணெய் நிறுவனங்களுக்கு விற்கும் திட்டத்தை இந்தியா பரிசீலித்து வருகிறதாகவும்.

உள்நாட்டு எரிபொருள் சில்லறை விற்பனையில் பன்னாட்டு நிறுவனங்களை ஈர்க்க அரசு ஆர்வமாக உள்ளதாக செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளது, இந்த நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை விற்க அரசாங்கத்தின் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதன்படி பிபிசிஎல் நிறுவனத்தின் 53.3% பங்குகளை விற்பனை செய்யவுள்ளதாக அறிய முடிகிறது.

ஏற்கனவே சவூதி அரம்கோ நிறுவனம் இந்தியாவில் சுத்திகரிப்பு மற்றும் விற்பனை ஒப்பந்தங்களை ஏற்படுத்தி உள்ளது, அதே நேரத்தில் ரஷ்யாவின் ரோஸ்நெஃப்ட் பி.ஜே.எஸ்.சி நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் எரிபொருள் விற்பனை ஆகியவற்றில் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாரத் பெட்ரோலியம் நிறுவனம் 1970 பர்மா ஷெல் என அழைக்கப்பட்டு வந்தது. மேலும் 1920 களில் பர்மா ஷெல், ராயல் டச்சு ஷெல் மற்றும் பர்மா ஆயில் நிறுவனம் மற்றும் ஆசியாடிக் பெட்ரோலியம் (இந்தியா) இடையே ஒரு கூட்டு ஒப்பந்த அடிப்படையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த காரணிகளால் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 280 புள்ளிகள் உயர்ந்து 37,384 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 11,075 புள்ளிகளில் முடிந்தது.

வாராந்திர அடிப்படையில் கணக்கிட்டால், கடந்த வாரம் 31 பங்குகள் 1.1 சதவிகிதமும் 50 பங்குகள் 1.2 சதவிகிதம் உயர்ந்தன. உதாரணமாக அமெரிக்காவை சேர்ந்த அபோட் லேபரேட்டரீஸ் இன்க் நிறுவனத்தின் இந்திய துணை நிறுவனம் இந்த ஆண்டு இதுவரை கிட்டத்தட்ட 32 சதவிகித உயர்வை கண்டது.

இந்தியாவின் மிகப்பெரிய எஃகு உற்பத்தி நிறுவனமான ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மந்தமான விற்பனையை கொண்டுள்ளதாக அதன் இணை நிர்வாக இயக்குனர் சேஷகிரி ராவ் கூறியுள்ளார்.

ரியல் எஸ்டேட் துறையில் மந்தநிலை என்பது இந்திய பொருளாதார உயிர்வாழ்வைத் தீர்மானிப்பதற்கான உண்மையான சோதனை கட்டத்தில் உள்ளது.

அடுத்ததாக இந்திய அரசின் உத்திகளும் அதனால் ஏற்படப்போகும் மாற்றங்களை என்னற்ற எதிர்பார்ப்போடு நகர்கிறது ஒவ்வொரு இந்தியரின் வாழ்க்கையும்.

மாட்டு சிறுநீருக்கு உள்ள மதிப்பு கூட மனித உயிர்களுக்கு இல்லை என்கிற ரீதியில் பேசி வருகிறார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். இதையே பல கட்சியினரும் மக்களும் கூறி வரும் நிலையில். 

சரிந்துள்ள பொருளாதாரத்தை சீரமைக்க இதுவரை நடவடிக்கை ஏதும் எடுத்ததாக தெரியவில்லை. வங்கிகள் இணைப்பு. வெளிநாட்டு முதலீடு. இவைகள் நாட்டின் பொருளாதாரத்தை நிலை நிறுத்த வழிவகுக்காது.

மாறாக நாட்டின் பொருளாதாரத்தை வேறு நாடுகள் கொள்ளையடிக்க வழி வகுக்க செய்யும். அரசு இந்த சூழலை எப்படி சமாளிக்க போகிறது என்று மக்கள் மட்டுமின்றி பொருளாதார நிபுணர்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மணியன் கலியமூர்த்தி.