அழிந்து வரும் கார்ப்பரேட் நிறுவனங்கள்! தப்பி ஓடும் கோடீஸ்வரர்கள்! தற்கொலை செய்யும் தொழில் அதிபர்! என்ன நடக்கிறது இந்தியாவில்? உஷார் மக்களே!

மோடியின் அரசு அசுரத்தனமான மெஜாரிட்டியுடன் ஆட்சிக்கு வந்திருக்கிறது.


ஆனால், நாட்டின் பொருளாதாரம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை என்று பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள். நாடு மிகுந்த ஆபத்தான பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறது என்பதற்கு உதாரணமாக சில காட்சிகளை சுட்டிக் காட்டுகிறார்கள். ஜெட் ஏர்வேஸ் இழுத்து மூடப்பட்டது. ஏர் இந்தியா மோசமான இழப்புகளை சந்தித்து வருகிறது. பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 54,000 பேர் வேலை இழக்கும் ஆபத்தில் உள்ளனர்.  தபால் போக்குவரத்து நிறுவனம் 15 ஆயிரம் கோடி நஷ்டம். வீடியோகான் நிறுவனம் திவால்.

டாடா டொகோமோ அழிந்துபோனது.  ஏர்செல் கதை முடிந்து போனது.  ஜேபி குழுமம் உயிர் ஊசலாடுகிறது.  ஓ.என்.ஜி.சி.யின் நிலமை மோசமாகிக் கொண்டே போகிறது. வங்கிகளில் இருந்து பெரிய அளவில் கடன் வாங்கிய 36 கோடீஸ்வரர்கள் நாட்டில் இருந்து தப்பியோடியுள்ளனர். பெரிய கோடீஸ்வரர்களின் தள்ளுபடி செய்யப்பட்ட வங்கி வாராக்கடன் தொகை, 35 மில்லியன் கோடி. பி.என்.பி தள்ளாடுகிறது. மற்ற வங்கிகளும் பெரும் இழப்புக்களை சந்தித்து வருகின்றன. நம் நாட்டின் மீது உள்ள கடன் 131100 மில்லியன் டாலர்கள்.

ரயில்வே தனியார் நிறுவனங்களுக்கு தாரைவார்க்கப் படுகிறது. செங்கோட்டை உட்பட அனைத்து தேசிய வளங்களும் வாடகைக்கு விடப்படுகின்றன.  பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டிக்கு பிறகு லட்சக்கணக்கான மக்கள் வேலையில்லாமல் உள்ளனர். 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்ட விகிதம்.

முந்தைய அரசாங்கங்களைவிட மூன்று மடங்கு அதிகமான ராணுவத்தினரின் உயிரிழப்பு. ஐந்து விமான நிலையங்கள் அதானிக்கு கொடுக்கப்பட்டுள்ளன. அடேங்கப்பா, இத்தனை பிரச்னைகள் இருக்கும்போது நம்ம மோடி காட்டுக்குள் போய் பந்தா பண்றாரே, என்னத்த சொல்றது. நாமதான் எச்சரிக்கையா இருக்கணும்.