உங்கள் உடல் எடையை சீக்கிரம் குறைக்க விரும்புகிறீர்களா? அப்போ தினமும் இதை உண்ணுங்கள்!

நமது வேக வாழ்க்கையில் நாம் மறந்து போன வரகை நாம் மீண்டும் பயன்படுத்த ஆரம்பித்தால் நம் வாழ்க்கைக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டுவதாக அமையும்.


இன்றைய காலத்தில் பலருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனை அதீத உடல் எடை. இதற்கு நார்ச்சத்து அதிகம் கொண்ட, கொழுப்பை கரைக்கக்கூடிய வேதிப்பொருட்கள் வரகரிசியில் அதிகம் நிறைந்துள்ளன. தினந்தோறும் காலை அல்லது மதியம் வரகரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடல் சீக்கிரத்தில் எடை குறையும்.

வரகு அரிசி ரத்தத்தில் அதிகளவு சேர்ந்துள்ள‍ ச‌ர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி, மிதமான அளவுடன் பராமரிக்கிறது. வரகில் புரதம், கால்சியம், வைட்டமின் பி ஆகியன இருக்கின்றன. தாதுப்பொருட்களும் நிரம்ப உள்ளன. மேலும், விரைவில் செரிமானம் அடைவதுடன் உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கும்.

நடுவயது, முதிர்ந்த வயதினருக்கு வரக்கூடிய மூட்டுவலியைக் கட்டுப்படுத்தி, ஆரோக்கியத்தைத் தருகிறது. மாதவிடாய்கோளாறுகளால் அதிகளவு பாதிப்பைச் சந்திக்கும் பெண்கள் இந்த வரகைச் சமைத்து சாப்பிடுவது நல்லது. இரத்த‍ போக்கு சீரடையும், வயிற்று வலியும் குறையும் என்கிறார்கள் சித்த‍ மருத்துவர்கள்.