உடனே பலன் தரும் பத்து சித்த மருத்துவம்! கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியவை!

சின்ன சின்ன நோய்களுக்கெல்லாம் மாத்திரை சாப்பிடாமல் இது போல வீட்டுவைத்தியமும் சித்தவைத்தியமும் தெரிந்து வைத்துக்கொண்டு பலன் பெறுங்கள்.


பசி உண்டாக புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

சேற்றுபுண் குணமாக காய்ச்சிய வேப்ப எண்ணை தடவி வர சேற்றுபுண் குணமாகும்..

வெட்டுக்காயம் குணமாக நாயுருவி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து, வெட்டுக் காயத்தின் மீது பூசிவர விரைவில் ஆறிவிடும்.

பற்கள் உறுதியாக இருக்க மாவிலையை பொடி செய்து பல் துளக்கினால் பற்கள் சுத்தமாகவும் உறுதியாகவும் இருக்கும்.

தொண்டை கம்மல் தீர கற்பூர வள்ளிச் சாற்றில் கற்கண்டுத் தூள் ஒரு சிட்டிகை போட்டுச் சாப்பிட்டால் தொண்டைக்கம்மல் நிவர்த்தியாகும்.

தும்மல் நிற்க தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் அல்லது பாலில் சாப்பிட தும்மல் நிற்கும்.

படர்தாமரை போக்க அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச தீரும்.

வயிற்று வலி நீங்க வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

அஜீரணசக்திக்கு சீரகம்,இஞ்சி,கறிவேப்பிலை இவற்றை நீர்விட்டு அவித்து சிறிதளவு சர்க்கரை கூட்டி தின்று நீர் குடித்தால் அஜீரணம் நீங்கிவிடும்.

அறிவு கூர்மை அடைய வல்லாரை இலையை உலர்த்தி பொடியாக்கி நெய்யில் கலந்து அருந்தலாம் .