சர்க்கரை நோயால் எதை உண்பது எதை தவிர்ப்பது என்று தெரியாமல் தவிக்கிறீர்களா?

உடல் உழைக்காமல் ஏஸி அறையில் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள் அதிகமாக அரிசி உணவை எடுக்காமல் காய்கறிகள் அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.


கீரைகளில் பொட்டாசியம், வைட்டமின் ஏ கால்சியம் ஆகியவையும் புரதமும் சேர்ந்திருக்கிறது. அதிகளவு ஸ்டார்ச் ஆன்டி ஆக்ஸிடண்ட் நிறைந்திருப்பதால் இவை நீரிழிவு நோயாளிகளுக்கு உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.நீரிழிவால் கண்களுக்கு உண்டாகும் கண் புரை போன்ற பாதிப்பை தடுக்கவும் இவை உதவுகின்றன.

பழங்களில் ஆப்பிள், ப்ளூபெர்ரி, கொயா பழங்களோடு சிட்ரஸ் இருக்கும் பழங்களும், இனிப்பு குறைவாகவும் துவர்ப்பு குறைவாகவும் இருக்கும் பழங்களை சாப்பிடுவது நல்லது.சிட்ரஸ் நிறைந்த ஆரஞ்சு, எலுமிச்சை பழங்கள் ஆன் டி பயாடிக் குணங்களை கொண்டிருப்பவை. கார்போஹைட் ரேட் இல்லாமல் இவற்றின் மூலம் வைட்டமின் மற்றும் தாதுக்கள் எடுத்துகொள்ளலாம். ஆப்பிள் பழங்களை தோல் நீக்காமல் எடுத்துகொள்ள வேண்டும். இவை தவிர பழுப்பு நிறத்தில் உள்ள கொய்யா, நாவற்பழம், துவர்ப்பு நிறைந்த நாட்டு மாதுளை போன்றவையும் சர்க்கரை நோய்க்கு நல்லது.

முழு ஓட்ஸ், சோளம், கம்பு, பார்லி, கோதுமை உணவுகள் என்று மாறி மாறி எடுத்துகொள்ள வேண் டும். இவை பொதுவாக கொடுத்திருக்கும் உணவு வகைகள் தான். அனைத்தையும் சம அளவில் திட் டமிட்டு எடுக்கும் போது சர்க்கரை நோய் கட்டுக்குள் வைக்கும் என்பதோடு சர்க்கரை நோயால் வரும் பிரச்சனைகளையும் உண்டாக்காது .