உலக கோப்பையின் மிகச்சிறந்த கேட்ச்! ஸ்டீவ் ஸ்மித்தை தெறிக்கவிட்ட கோட்டரெல்!

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் மேற்கிந்திய தீவுகளின் கோட்ரல் பவுண்டரி லைனில் அபாரமாக கேட்ச் பிடித்த வீடியோ வைரலாகி வருகிறது.


டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா அணியின் முதல் நான்கு விக்கெட்களை 38 ரன்களுக்குள் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணிக்கு மேற்கிந்திய தீவுகள் அணி நெருக்கடி கொடுத்தது. 

பின்னர் ஸ்டீவ் ஸ்மித் மட்டும் நிதானமாக விளையாடி அந்த அணியை சரிவிலிருந்து மீட்டார். 45 வது ஓவரை வீசய ஓஷன் தாமஸ் பந்தை சிக்ஸ் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார் ஸ்டீவ் ஸ்மித். 

அவர் அடித்த பந்து சிக்ஸ் லைன் அருகே செல்ல , அங்கே மேற்கிந்திய தீவுகள் அணியின் கோட்ரல் ஒரே கையில் தாவி பிடித்தார். ஏனினும் அவருக்கு பேலன்ஸ் இல்லாத காரணத்தால் அவர் பந்தை மேலே தூக்கிப்போட்டு பின்னர் அந்த கேட்சை பிடித்து பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறார் மேற்கிந்திய தீவுகள் அணியின் கோட்ரல். 

சமுக வலைத்தளங்கிளில் வேகமாக பரவி வரும் இந்த வீடியோவை பார்த்து , சிலர் இது தான் இந்த உலகக்கோப்பை தொடரில் மிக சிறந்த கேட்ச் என அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.