266 குமரிகளுடன் பிறந்த நாள் பார்ட்டி செய்த பிரபல ரவுடி! ரெக்கார்ட் டான்சுடன் களைகட்டிய இரவு விருந்து!

பெங்களூருவில் 266 பெண்களின் நடன நிகழ்ச்சியுடன் ஆடம்பர உணவு விடுதியில் இரவு நேர ஆடம்பர விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்த பிரபல ரவுடி போலீசாரைக் கண்டதுடன் கூட்டாளிகளுடன் தப்பியோடினான்.


பெங்களூரைச்  சேர்ந்தவன் கிரி என்ற குனிகல் கிரி. இவன் மீது ஆள்கடத்தல், கொள்ளை, வழிப்பறி, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. தனது பிறந்த நாளை முன்னிட்டு ரெசிடென்சி சாலையில் உள்ள ஒரு ஆடம்பர நடன விடுதி மற்றும் உணவகத்தில் ஏராளாமான ரவுடிகள் நிழல் உலக நபர்களை அழைத்து இரவு விருந்து நிகழ்ச்சி நடத்தினான்.

அந்த விடுதியின் 3 தளங்கள் ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்டு விருந்து நிகழ்ச்சி ஆடம்பரமாக நடைபெற்றது. இது குறித்த ரகசியத் தகவலின் பேரில் நூற்றுக்கணக்கான நடனப் பெண்கள் குத்தாட்டம் ஆடிக் கொண்டிருந்தும், அவர்கள் மீது ரவுடிகள ரூபாய் நோட்டு மழை பொழிந்துகொண்டிருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அந்த இடத்தை போலீசார் சுற்றிவளைக்க முயன்றனர். ஆனால் கூட்டத்தையும் விடுதியின் பக்கவாட்டு இடங்களில் இருந்த இருளையும் பயன்படுத்திக்கொண்டு ரவுடிகள் தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்த 266 நடனபெண்களை மட்டும் மீட்டுக் கொண்டு வந்த போலீசார் தப்பியோடிய ரவுடிகளை தேடி வருகின்றனர். 

266 குமரிகளுடன் பிறந்த நாள் கொண்டாடியவன் எப்படி ரவுடியாக இருக்க முடியும் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். எனவே அவன் நிழல் உலக தாதாவாகத்தான் இருப்பான் என்றும் சொல்கிறார்கள்.