இளம் பெண் கூறிய பாலியல் புகார்! பிரபல இயக்குனர் எடுத்த விபரீத முடிவு!

கொல்கத்தா: #MeToo புகாருக்கு ஆளான டைரக்டர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பெங்காலி மொழியில் சினிமா படம் இயக்கி வரும் ஆர்க்யா பாசு என்பவர்தான் தற்கொலை செய்துகொண்டவர். 

48 வயதாகும் இவர், கடந்த ஆண்டு டிசம்பரில் பாலியல் புகாருக்கு ஆளானார். அந்த காலக்கட்டத்தில் தமிழ் மற்றும் மராத்தி படங்களின் படத்தொகுப்பு பணியில் அவர் ஈடுபட்டிருந்தார். பெண் இயக்குனர் நிஷ்தா ஜெயின் இயக்குனர் மீது புகார் கூறியிருந்தார்.

ஆனால், #MeToo புகார் அவரை மனதளவில் பெரிதும் பாதித்துவிட்டது. இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான ஆர்க்யா பாசு, கடந்த மார்ச் 1ம் தேதியன்று தனது வீட்டில், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதன்பின்னர், பிரேத பரிசோதனை செய்து, அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதுபற்றி அவரது நண்பர் ஒருவர் கூறுகையில், ''ஃபிலிம் இன்டிடியூட்டில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த ஆர்க்யா பாசு, டாக்குமென்டரி வகை படங்களை இயக்குவதில் திறமைசாலி. இவரது படங்கள், சர்வதேச சினிமா விழாக்களில் கலந்துகொண்டு, விருதுகளையும் வென்றுள்ளன.

ஆனால், பாலியல் புகார் காரணமாக, மன உளைச்சல் ஏற்பட்டு, அவர் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சி அளிக்கிறது,'' எனக் குறிப்பிட்டார்.