39 வயதில் 41 வயது இயக்குனரை 2வது கணவனாக்கிய பிரபல நடிகை! யார் தெரியுமா?

கொல்கத்தா: பிரபல பெங்காலி சினிமா இயக்குனர் ஸ்ரீஜித் முகர்ஜி, வங்கதேச நடிகையை திருமணம் செய்துகொண்டார்.


டிசம்பர் 6ம் தேதி இந்த திருமணம் நிகழ்ந்துள்ளது. இதுபற்றி வங்கதேச நடிகை ரஃபியாத் ரஷித் மிதிலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். ''திரு மற்றும் திருமதி ரஷித் முகர்ஜி,'' என ரஃபியாத் இதற்கு தலைப்பிட்டுள்ளார். சவுத் கொல்கத்தாவில் எளிமையான முறையில் இந்த திருமணம் நடைபெற்றது.

பெங்காலி சினிமா துறையை சேர்ந்த ருத்ராநில் கோஷ், ஜிஸூ சென்குப்தா மற்றும் கவிஞர் ஸ்ரீஜாதோ உள்ளிட்ட பிரபலங்கள் இதில் பங்கேற்றனர்.   இயக்குனர் ஸ்ரீஜித் முகர்ஜி, தேசிய விருது பெற்ற பல பெங்காலி படங்களை இயக்கியுள்ளார்.

அவரது இயக்கத்தில் வெளியான ஆட்டோகிராப், ஏக் ஜே சிலோ ராஜா ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவை. கடந்த சில ஆண்டுகளாகவே இருவரும் காதலித்து வந்த நிலையில், வயது வித்தியாசம், கலாசார வேறுபாடுகளை கடந்து, ஸ்ரீஜித், ரஃபியாத் திருமணம் நிகழ்ந்துள்ளதற்கு, பலரும் சமூக ஊடகங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.