அந்த வயதில் கண்றாவி வீடியோ பார்த்தால் என்ன தண்டனை தெரியுமா?.

இப்போது கையடக்க போனில் சகல கண்றாவிகளும் வந்து சேர்ந்துவிடுகிறது. அதை பார்க்கும் டீன் ஏஜ் வயதினர், கண்ணில் பார்த்ததை நிஜத்தில் செய்ய ஆசைப்படுவதுதான் பல்வேறு பிரச்னைகளை உருவாக்கிவிடுகிறது.


இதை எப்படி தடுப்பது என்று தெரியாமல் ஆளாளுக்கு தடுமாறிக்கொண்டு இருக்கும்போது, சிங்கப்பூர் அரசு புதிய நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதன்படி, இனிமேல் காதல் திடீரென முறிந்த பிறகு, காதலன் அல்லது காதலியின் அந்தரங்க படங்களை சமூக வலைத்தளம் மூலம் மற்றவர்களுக்கு அனுப்புவது பழிவாங்கும் நடவடிக்கையாக அதாவது ரிவெஞ்ச் போர்ன் என்று அழைக்கப்படுகிறது. அதேபோன்று தன்னுடைய அந்தரங்க படத்தை மற்றவர்களுக்கு வீடியோ மெசேஜ் ஆக அனுப்பி கிளுகிளுப்பூட்டுவது சைபர் பிளாஷிங் எனப்படுகிறது. 

இந்த வகையில்,  ரிவெஞ்ச் போர்ன் குற்றத்தில் ஈடுபடும் நபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, சைபர் பிளாஷிங் குற்றத்தில் ஈடுபடும் நபருக்கு ஓராண்டு தண்டனை என்று அறிவித்துள்ளது சிங்கப்பூர். அதேபோன்று அந்த மாதிரி வீடியோ காட்சிகளை 14 வயதுக்கு உட்பட்டவர்கள் பார்த்திருந்தால், அவர்களுக்கு 2 ஆண்டு, அபராதத்துடன் கசையடி என்று கடும் கட்டுப்பாட்டை கொண்டுவந்துள்ளது.

இப்போது சிங்கப்பூர் இளசுகள் செல்போனைக் கண்டாலே நாலடி தூரம் தள்ளி ஓடுகிறார்களாம். நம்ம ஊரில் எப்போது இப்படியெல்லாம் கட்டுப்படுத்தப் போகிறோம்.