ஓடும் ரயில்! மினி ஸ்கர்ட்டுடன் நின்ற இளம் பெண்! செல்போன் இளைஞர் செய்த தகாத செயல்! பிறகு நடந்த சுவாரஸ்யம்!

பெய்ஜிங்: ஓடும் ரயிலில் பெண் ஒருவரை, ஆபாசமாக படம்பிடித்த நபரும், அவரிடம் இருந்து அந்த பெண்ணை காப்பாற்றிய பயணி ஒருவரும் பற்றிய வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.


சீனாவில் எடுக்கப்பட்டதாகக் கருதப்படும் அந்த வீடியோவில், இளம்பெண் ஒருவர் ரயிலில் கம்பியை பிடித்தபடி நிற்கிறார். அவருக்கு பின்னால் அமர்ந்திருந்த ஒரு ஆண், திடீரென நிற்கும் பெண்ணின் காலுக்கு கீழே தனது ஸ்மார்ட்ஃபோன் கேமிராவை இயக்கி அந்த பெண்ணின் ஸ்கர்ட்டின் உள்ளே படம்பிடிக்கிறார்.

இதனை அருகில் இருந்த மற்றொரு நபர் உடனடியாகக் கவனித்து, எழுந்து அந்த பெண்ணின் அருகில் சென்று நிற்கிறார். பிறகு, நிற்கும் பெண்ணை தனது சீட்டில் உட்காரும்படி அவர் சொல்ல, அவரும் நடந்தது என்னவென்று தெரியாமல், இருக்கையில் அமர்ந்து கொள்கிறார்.

இந்த வீடியோவை எதிரில் அமர்ந்திருந்த சக பயணி ஒருவர் படம்பிடித்து சமூக ஊடகங்களில் பகிர தற்போது இது உலகம் முழுக்க வைரலாகி வருகிறது.

இளம்பெண்ணை படம்பிடிக்க முயன்ற நபருக்கு கண்டனமும், அவருக்கு சரியான நேரத்தில் உதவி செய்த நபருக்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.