கைக்குழந்தைகளை வாடகைக்கு எடுத்து நடுரோட்டில் பகீர் செயல்! காட்பாடி பரபரப்பு!

வேலூர் மாவட்டம் காட்பாடியில் வாடகைக்கு கைக்குழந்தை எடுத்து பிச்சை எடுத்து வந்த பெண்ணை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் படி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


சேலம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.அதை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கொடியசைத்து தொடங்கிவைத்தார். பின்னர் அதில் பரிசு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் ரோட்டோரத்தில் நின்று கை குழந்தையுடன் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் பெண்ணை பார்த்துள்ளார். அப்போது அவரிடம் நேரில் சென்று எதற்காக பிச்சை எடுக்கிறாய் என கேட்டபோது அவர் ஆந்திர மாநிலம் புதூரை சேர்ந்தவர் என்றும் அங்கு பிழைக்க வழியில்லாமல் தமிழகத்திற்கு வந்து கைக்குழந்தையை வாடகைக்கு எடுத்து பிச்சை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அதிர்ந்துபோன மாவட்ட ஆட்சியர் கைக்குழந்தையை வாடகைக்கு கொடுத்தது யார்? என விசாரித்துள்ளார். இதையடுத்து அந்தப் பெண் வேலூர் மாவட்டம் பகுதியில் உள்ள ஒருவரை சுட்டிக்காட்டியுள்ளார். இதையடுத்து அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினரிடம் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையடுத்து கைக்குழந்தையுடன் அந்த பெண்ணை அரியூர் பகுதியில் உள்ள அரசு காப்பகத்தில் காவல்துறையினர் சேர்த்துள்ளனர்.