திருவண்ணாமலை அருகே, பிச்சை எடுத்து கொண்டிருந்த முதியவரை கண்ட மாவட்ட ஆட்சியர் முதியோர் பற்றி விசாரித்து அப்பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்துக்குச் சென்று அவருக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு அங்கு உள்ள ஊழியர்களுக்கு ஆட்சியர் ஆணையும் பிறப்பித்துள்ளார். தற்போது இந்த நெகிழ்ச்சி சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சாலையில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த முதியவர்..! நேரில் சென்று கலெக்டர் செய்த செயல்! திருவண்ணாமலை நெகிழ்ச்சி!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக திரு.கந்தசாமி பொறுப்பு வைக்கிறார். இவர், பொது மக்களுக்கு உதவி செய்வதில் மிகச் சிறந்து விளங்கி வருகிறார் என்று அப்பகுதி மக்கள் மிகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு பெற்றோரிடம் சொத்தை எழுதிவாங்கிவிட்டு அவர்களை விரட்டிய மகனை நேரில் அழைத்து மீண்டும் பெற்றோருக்கே சொத்தை எழுதித் தர வைத்தார் மாவட்ட ஆட்சியர். அதுமட்டுமின்றி, அந்த பெற்றோருக்கு தங்குவதற்கும் வசதியும் செய்து கொடுத்துள்ளார்.
மேலும், வேலை செய்யாமல் இருக்கும் அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் திரு.கந்தசாமி அவர்கள் தனது வாட்ஸ் அப்பில் ஆடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார், அந்த ஆடியோவில் ஒழுக்காக பணிகளை செய்யும் படியும்,அவ்வாறு பணி செய்ய தவறினால் அவர்களை தூக்கி எறியவும் தயங்மாட்டேன் என்று கூறியிருந்தார்.
இந்த சம்பவங்களை அடுத்து, திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தின் அருகே பிச்சை எடுத்துக்கொண்டிருந்த முதியவரைப் பார்த் திரு. கந்தசாமி அவர்கள், முதியவரிடம் சென்று, ஏன் பிச்சை எடுக்கிறீர்கள்? என்றும், உங்களுக்குக் குடும்பம் இல்லையா? உங்கள் பிள்ளைகள் என்கே உள்ளார்கள் என்றும் விசாரித்துள்ளார்.
பின்னர் அந்த முதியவர், தனது பெயர் கோவிந்தசாமி என்று, தான் கீழ்சிறுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறியுள்ளார். மேலும், தனக்கு யாரும் இல்லை என்றதால் தான் பிச்சை எடுத்து கொண்டு இருகின்றேன் என்று மிகவும் மனம் கொலைந்து தெரிவித்துள்ளார்.
இதனைக் கேட்ட ஆட்சியர், சற்று வருத்துடன் முதியோருக்கு ஆறுதல் கூறிய ஆட்சியர் அரசு நடத்திவரும் முதியோர் இல்லத்தில் சேர்ப்பதாகத் தெரிவித்துள்ளார். அங்கு மூன்று வேளை உணவுடன் மாதா மாதம் உதவித் தொகை கொடுப்பதாகவும் தெரிவித்தார்.
கோவிந்தசாமி, மலப்பாம்பாடியில் உள்ள முதியோர் இல்லத்தில் செல்ல ஒப்புக்கொண்ட நிலையில், அங்கு முதியவரை கவனித்துக்கொள்ள வேண்டும் என்றும், மேலும் மாதா மாதம் உதவித் தொகை வழங்கவும் என்றும் அங்குள்ள ஊழியர்களுக்கு உத்தரவிட்டார் ஆட்சியர். இந்த நற்செயலை கண்ட பொது மக்கள் ஆட்சிரை புகழ்ந்து பாராட்டுகிறார்கள். மேலும் இந்த நெகிழ்ச்சி சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக்கி பாராட்டுக்களை குவிக்கிறார்கள்.