காதல்! செக்ஸ்! கல்யானத்துக்கு முன்பே பிரசவம்! ஆனால் குழந்தைக்கு ஏற்பட்ட கொடூரம்! அதிர்ச்சி சம்பவம்!

நெல்லை மாவட்டம் அருகே நர்ஸிங் படித்து வந்த மாணவி திருமணத்திற்கு முன்னதாக கர்ப்பமாகி பெற்ற குழந்தை பசியால் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..


சிங்கை அருகே  உள்ள நர்சிங் கல்லூயில் படித்து வந்த இளம்பெண், தனது உறவினர் ஒருவருடன் காதல் வயப்படுகிறார். அடிக்கடி தனிமையில் சந்தித்த காதலர்கள் அத்து மீறியதில், மாணவி கர்ப்பமடைந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த மாணவியின் காதலர் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று விட  மாணவி கர்ப்பமான தகவல் அவரது பெற்றோருக்கு தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து மாணவியின் உறவினர்கள் கூடி அவர்களுக்கு  திருமணம் செய்து வைக்க முடிவு செய்து அந்த வாலிபரிடம் பேசினர். ஆனால் சரியாக பிடிதராத காதலன் இன்னும் சில மாதங்களில் ஊருக்கு வந்து விடுவதாக மழுப்பியுள்ளார். இதற்கிடையில்,  நேற்று முன்தினம் மாணவிக்கு பிரசவவலி ஏற்பட்டு,ஆண் குழந்தை பிறந்தது.

திருமணத்திற்கு முன்பு மகளுக்கு குழந்தை பிறந்த சம்பவம் வெளியே தெரிந்தால் அவமானம் என பயந்த பெற்றோர், குழந்தையை, ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்க்க கொண்டு சென்றனர் ஆனால் குழந்தையை பார்த்த காப்பகத்தினர் குழந்தை மூச்சு விட திணறுவதால் உடனடியாக மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் குழந்தை ஏற்கனவே இறந்த விட்டதாக மருத்துவர் தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த  சிங்கை போலீசார் குழந்தை இறப்பிற்க்கு பசியினால் தொடர்ந்து அழுததினால் ஏற்பட்ட மூச்சு திணறல் தான காரணம் என கூறபட்டதையடுத்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.