திருமணத்திற்கு முன்பே அவசரம்! தாலி இல்லாமலேயே குழந்தை பெற்ற டீச்சர்! ஆரணி பரபரப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் காதலன் திருமணம் செய்து கொள்ளாமல் மறுத்து வந்த நிலையில் தற்போது பெண் ஆசிரியை ஒருவர் குழந்தையும் பெற்றெடுத்துவிட்டார்.


மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள். தாய், தந்தைக்கு அடுத்தபடியாக குழந்தைகளை வழிநடத்தி செல்லும் பொறுப்பில் உள்ளவர்கள் குரு அதாவது ஆசிரியர்கள். அவர்கள்தான் சமூகத்தை பற்றியும் எதிர்காலத்தை பற்றியும் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்து எந்த விதத்திலும் பிள்ளைகள் வழிதவறி போய்விடக்கூடாது என்பதற்காக பாடத்துடன் சேர்த்து பொது அறிவையும் வளர்த்து வருகின்றனர்.

இதுபோன்ற ஆசிரியர்களின் போதனைகளை கேட்கும் மாணவ, மாணவியர்கள் இந்த சமூகத்தில் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கின்றனர். ஆனால் அப்படி மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியை ஒருவரே இந்த சமூகத்தில் ஒரு கயவனை நம்பி ஏமாந்துள்ளார் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில். 

ஆரணி அருகே வசித்து வரும் பெண் ஆசிரியை ஒருவர் கடந்த 3 ஆண்டுகளாக பிரபாகரன் என்பவரை காதலித்து வந்துள்ளார். வருங்கால வாழ்க்கைத்துணைதானே என்று பலமுறை அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார் ஆசிரியை. அதற்கு அடையாளமாக ஆசிரியை கர்ப்பம் தரித்தார். இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பிரபாகரனிடம் அந்த பெண் ஆசிரியை கேட்க சினிமாவில் வரும் வில்லன் போல் திருமணம் செய்து கொள்ள முடியாது என வசனம் பேசியுள்ளார்.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஆசிரியை கருவை கலைக்க மனமில்லாமலும், சமூகத்திற்கு பயந்தும் இக்கட்டான சூழலில் வாழ்ந்து வந்துள்ளார். இதற்கிடையே அந்த ஆசிரியை அழகான ஆண் குழந்தை பெற்றெடுத்தார். இதற்கு மேலும் காதலனை நம்பி உபயோகம் இல்லை என கருதிய ஆசிரியை காவல்நிலையத்தை நாட காதலன் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.

ஒரு குழந்தை பிறக்கும் போது ஏற்படும் சுப காரியங்களை அதிர்ஷ்டம் என்பார்கள். இங்கு அதிர்ஷ்டம் தந்தையை சிறைக்கு அனுப்பியுள்ளது.