ஏரிகளை 1 அடி ஆழப்படுத்தியிருந்தால் போதும்! தண்ணீர் பிரச்சனை வந்திருக்காது! 20 வருசமாக கூறி வரும் சகாயம்!

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடிற்க்கு 20 வருடங்கள் முன்பாகவே தீர்வை அறிக்கையாக சமர்ப்பித்ததாக ஐ ஏ எஸ் அதிகாரி சகாயம் பேட்டி.


சென்னையை அடுத்த தாழம்பூரில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சகாயம் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தண்ணீர் பஞ்சம் குறித்த கேள்விக்கு,   கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே தான் ஆய்வின் அடிப்படையில் வெளியிட்ட அறிக்கையை சுட்டிக்காட்டினார்.

ஏரிகளை சுமார் ஒரு மீட்டர் ஆழம் வரைத் தூர்வாரி மழை நீரை சேமித்து வைப்பதன் மூலம் தீர்வுக் காணலாம் என குறிப்பிட்டு அறிக்கை சமர்பித்துள்ளதாக கூறியவர், அரசு அதனை அமல்படுத்த வலியுறுத்தினார்.

மேலும் ,மும்மொழி கொள்கை குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில்  தாய்மொழி கல்வியே சிறந்தது எனவும், பல  முன்னேறிய நாடுகளில் தாய்மொழியை முதன்மையாக  பிள்ளைகளுக்கு கற்பிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.