படுக்கை அறையில் அதுக்கு தடை போட்ட 26 வயது கணவன்! 36 வயது நடிகை என்ன செய்தார் தெரியுமா?

பிரியங்கா சோப்ரா - நிக் ஜோன்ஸ் ஜோடியின் காதல் வாழ்க்கை சிறப்பாக அமைய படுக்கை அறையில் நிக் ஜோன்ஸ் போட்ட கூடுதல் கட்டுப்பாடு அவர்களுக்கு மட்டுமன்றி அனைவருக்கும் பயனுள்ளதாகவே உள்ளது.


பிரியங்கா சோப்ராவுக்கும் நிக் ஜோன்ஸ்க்கும் ஜோத்பூர் நகரில் மிக பிரமாண்டமாகவும், ஆடம்பரமாகவும் திருமணம் நடைபெற்றது. அதுமட்டுமன்றி குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், நண்பர்களுக்காக டெல்லியிலும், நடிகர் நடிகைகளுக்காக மும்பையிலும் இரண்டு வரவேற்பு நிகழ்ச்சிகளை நடத்தினர்.

அதற்கு முன் சுவிட்சர்லாந்தில் தேனிலவைக் கொண்டாடிய இந்த ஜோடி மிகவும் இனிமையாக வாழ்க்கையை தொடங்கினர். வாழ்க்கையில் சில கட்டுப்பாடுகளையுமு்  முக்கியமான விஷயங்களில் அனுசரித்துப் போவதும் தான் அன்பை அதிகரிக்கும் என்ற முடிவுடன் அவர்களின் வாழ்க்கை தொடங்கியது. 

அதனைச் சார்ந்து அவர்கள் தங்களுக்கிடையே சில கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டு அதனை மிகவும் கண்டிப்பாக பின்பற்றி வருகிறார்களாம். இந்நிலையில் நிக் ஜோன்ஸ் போட்ட ஒரு பெட்ரூம் ரூல் அவர்கள் வாழ்க்கையின் முக்கிய அம்சமாகியிருக்கிறது. 

இருவரும் அறவே படுக்கையறைக்குள் செல்போன் பயன்படுத்தவே கூடாது என்பதும் படுக்கையறைக்குள் செல்ஃபோனை எடுத்துக்கொண்டே வரக்கூடாதௌ என்பதும் தான் ரூல் எப்போதும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம். டிவிட்டர் என சமூக வலைதளங்களில் பொழுதைக் கழித்துவரும் செல்ஃபோன் பைத்தியமான பிரியங்கா சோப்ராவும் இதற்கு ஒப்புக்கொண்டிருக்கிறார். 

அதனை கண்டிப்பாக பின்பற்றத் தொடங்கிய பிறகு இருவருக்கும் பரஸ்பரம் பேசிக் கொள்ள நேரம் அதிகமாகவே கிடைத்த போதுதான் செல்போன் உறவுகளுக்கு இடையே எப்படி இடைவெளியை ஏற்படுத்துகிறது என இருவருக்கும் புரிந்தது. இது அவர்களுக்கு மட்டுமன்றி, திருமணமான மற்றும் திருமணமாகாத அனைவருக்குமே ஏற்ற ஒன்று தானே