திருச்செங்கோடு பியூட்டி பார்லர் ஷோபனா கொடூர கொலை..! தவறான உடல் சார்ந்த தேடல் காரணமா?

திருச்செங்கோடு அருகே அழகு நிலைய பெண் நிர்வாகி ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தினால், வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


திருச்செங்கோடு அருகே உள்ள இறையமங்கலம் பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி வனிதா என்கிற சோபனா. இவர்கள் இருவருக்கும் திருமணமாகி தேவா மற்றும் சச்சின் என்ற இரு மகன்கள் உள்ளனர். செந்தில் பூக்கடை மேலாளராக இருக்கிறார். சோபனா செந்திலின் சகோதரி நடத்திவரும் அழகு நிலையத்தை நிர்வாகம் செய்து வந்தார். 

இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி மாலை வழக்கமான நேரத்தில் ஷோபனா வீடு திரும்பாததால் பதறிப்போன செந்தில் அக்கம்பக்கத்தில் தொடர்ந்து தேடியுள்ளார். பிறகு சோபனா செந்திலுக்கு போன் செய்து, தனது மகன் தேவாவின் பிறந்தநாளுக்கு துணி மற்றும் இனிப்புகள் வாங்க சென்றதாகவும் இரவு நேரமாகிவிட்டதால் வீட்டிற்கு வரும் கடைசி பேருந்தை தவறவிட்டு தாகவும் கூறியிருக்கிறார். மேலும் தனது நண்பருடன் தற்போது காரில் வந்து கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.  

அதன்பிறகு நள்ளிரவு ஆகியும் சோபனா வீடு திரும்பாததால், மேலும் பதற்றமடைந்த செந்தில் அருகிலிருந்த காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளார். இதனால் காவல்துறையினர் மற்றும் சோபனாவின் உறுப்பினர்கள் தொடர்ந்து தேடுதலில் ஈடுபட்டு வந்தனர்.  

இந்நிலையில் நேற்று காலை திருச்செங்கோடு அருகே உள்ள புளியம்பாளையம் பகுதியில் இருக்கும் குட்டையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சோபனா இறந்து கிடந்துள்ளார். இதனால் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.  

உடனடியாக சோபனாவின் உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இரவில் சோபனா வீட்டிற்கு காரில் அழைத்து வந்த மர்ம நபர் யார்?, எதன் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம்? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.  

சோபனாவின் செல்போனை பரிசோதித்துப் பார்த்ததில், கடைசியாக திருச்செங்கோடு அருகே உள்ள துக்கவாடி பகுதியைச் சேர்ந்த கணேஷ்குமார் என்பவரின் தொலைபேசி நம்பர் இருந்ததை கண்டு அவரை போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் சோபனாவின் செல்போனிலும் கணேஷ்குமாரின் புகைப்படங்கள் இருந்துள்ளன.

இதனால் அவருடன் சோபனாவுக்கு என்ன உறவு என்று விசாரணை நடைபெற்று வருகிறது. அப்போது கணேஷ் குமாருடன் ஷோபனாவுக்கு முறையற்ற உறவு இருந்துள்ளதை கண்டுபிடித்துள்ளனர். இதன் காரணமாக கொலை நடைபெற்று இருக்கலாம் என்று விசாரணை நடைபெற்று வருகிறது-