அரிசியால் அழகிற்கு இவ்ளோ நன்மைகளா? இது தெரியாம போச்சே..

அரிசியில் ஏராளமான ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. அவை சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவுகின்றன. சரும ஆரோக்கியத்திற்கு அரிசி நீரும் முக்கிய பங்காற்றுகிறது.


முகத்தில் புள்ளிகள், தழும்புகள் இருந்தால் அதனை போக்குவதற்கு ஒரு டீஸ்பூன் அரிசி மாவுடன் அதே அளவு கடலை மாவு, சிறிதளவு மஞ்சள் தூள், சிறிதளவு பால் சேர்த்து குழைத்து முகத்தில் பூச வேண்டும். மாவு கலவை உலர்ந்ததும் முகத்தை கழுவ வேண்டும். தொடர்ந்து அவ்வாறு செய்துவந்தால் அழகில் பொலிவு ஏற்படும்.

அரிசியை ஊறவைக்கும் தண்ணீரையும், சாதத்தை வடித்த தண்ணீரையும் அழகுக்கு பயன்படுத்தலாம். அதனை தலைமுடி மற்றும் முகத்தில் தடவி மசாஜ் செய்து 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிட வேண்டும். சரும சுருக்கங்களை போக்குவதற்கு அரிசி மாவுடன் சம அளவு பொடித்த பாதாம், தேங்காய் எண்ணெய் கலந்து முகத்தில் தடவி வரலாம். 

அரிசி கழுவிய நீரைக் கொண்டு முகத்தைக் கழுவி வந்தால், முகத்தில் உள்ள சுருக்கங்கள் அனைத்தும் நீங்குவதோடு, சருமத்துளைகளும் அடைக்கப்படும். அதற்கு காட்டனை அரிசி கழுவிய நீரில் நனைத்து, பின் அதனைக் கொண்டு முகத்தை துடைத்து எடுக்க வேண்டும்.