படிப்பது BCA ! செய்தது 6 அடியில் பிரமாண்ட ரோபோ! சென்னை மாணவிகள் படைத்த சாதனை!

செயற்கை நுண்ணறிவு திறன் கொண்டு கல்லூரி இறுதியாண்டு படிக்கும் இளங்கலை மாணவிகள் ரோபோவை செய்து அசத்தியுள்ளனர்.


சென்னை தி நகரில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை பட்டம் பயின்று வரும் இறுதி ஆண்டு மாணவிகள் 'ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்' எனப்படும் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்டு ரோபோ ஒன்றை வடிவமைத்து அசத்தி இருக்கின்றனர். 

இந்த ரோபோக்கள் தற்போது வரவேற்பதற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. புதிதாக கல்லூரிக்கு வருபவர்களுக்கு வரவேற்பு அளிக்கும் வண்ணமும், கேட்கும் சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் வகையிலும் இந்த ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவிகளின் திறமையை கண்டு பலரும் பாராட்டுகின்றனர். சுமார் 6 அடி மற்றும் 29 கிலோ எடை என்ற அளவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோவிற்கு சாரா எனவும் பெயரிடப்பட்டுள்ளது.