16 வயது சிறுமி முன் ஆடைகளை களைந்து நிர்வாணமாக நின்ற பேங்க் மேனேஜர்!

காரைக்குடி அருகே உள்ள மானகிரி பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மேலாளராக பணிபுரிபவர் ரவிச்சந்திரன்(55) ,இவர் அந்த பகுதியில் உள்ள 10 ஆம் வகுப்பு படித்துவரும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.


இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே வைரவபுரத்தில் கூலி வேலை செய்யும் தாய், தந்தையுடன் வசித்து வரும் 10ஆம் வகுப்பு மாணவி அவரின் பெற்றோர்கள் வேலைக்கு சென்று விட்டதால் நேற்று வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது எதிர்வீட்டில் வசிக்கும் மானகிரியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் மேலாளரான ரவிச்சந்திரன், தவறான எண்ணத்தோடு சிறுமியின் கையைப்பிடித்து அவரது வீட்டுக்கு இழுத்துச் சென்றுள்ளார்.

மேலும் தனது ஆடைகளை கலைந்து நிர்வாணமாக நின்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி அவரை தள்ளிவிட்டு தப்பியுள்ளார். இந்த சம்பவம் குறித்து பக்கத்தில் உள்ள தனது உறவினர்  வீட்டில்  தனக்கு நேர்ந்த கொடுமையை அழுதுகொண்டே அவர்களிடம் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பெண்ணின் உறவினர்கள் வங்கி மேலாளரான ரவிச்சந்திரனை கையும் களவுமாக பிடித்து தர்ம அடி கொடுத்து பின்னர் காரைக்குடி மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து மாணவி மற்றும் அவரது பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் ரவிசந்திரனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். இதுகுறித்து போலீசார் அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.