வங்கியில் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் வைத்திருந்தால் ஆபத்தா..? நிர்மலா மேடத்துக்கு தங்கமான மனசு.

இதற்கு முன்பு வங்கியில் நாம் போட்டிருக்கும் பணத்தில் 1 லட்சத்துக்கு மட்டுமே உத்தரவாதம் இருந்தது. ஆனால், இந்த பட்ஜெட்டில் அந்தத் தொகையை 5 லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளார்.


அதாவது வங்கி திவாலானால், நீங்கள் எத்தனை கோடி ரூபாய் போட்டு வைத்திருந்தாலும் 5 லட்சம் ரூபாய் நிச்சயம் கிடைக்குமாம். இந்த அறிவிப்புக்கு சந்தோஷப்பட வேண்டிய மக்கள் அச்சம் அடைந்து, பணத்தை வங்கியில் இருந்து எடுக்கிறார்களாம்.

ஏனென்றால், ஏற்கெனவே 10 லட்சம் டெபாசிட்டாக இருப்பதாக வைத்துக்கொள்வோம், அவர் இப்போது ஐந்துலட்சம்தானே கிடைக்குமென்ற அச்சத்தில் தன் பணத்தை வங்கியிலிருந்து எடுக்கத்தானே செய்வார்? முன்பெல்லாம் திவாலானால் ஒருலட்சம்தான் கிடைக்கும், இப்போது ஐந்துலட்சமென்றால் அது அதிகம்தானே என்று எவரும் இருந்துவிட மாட்டார்கள். 

ஏனெனில் இந்தியாவில் வங்கிகள் அவ்வளவு பாதுகாப்பாக இல்லையென சர்வதேசப் பொருளாதார அமைப்புகள் கூறிவருகின்றன; இந்நிலையில் அதிகம் பணம் வைத்திருக்கும் ஒருவர் பதற்றப்படத்தானே செய்வார்? இவ்வாறு நிறையபேர் தம் பணத்தை எடுக்க ஆரம்பித்தால் ஏற்கெனவே தள்ளாட்டத்திலிருக்கும் வங்கிகள் உடனே திவாலாகிவிடாதா?

வங்கி திவால் ஆகும் முன்பு பணத்தை எடுத்துவிட வேண்டும் என்பதுதானே மக்களின் ஆசையாக இருக்கிறது. என்னமோ நடக்கப்போகுது ஜாக்கிரதை.