போலீஸ் ஸ்டேஷனில் பெண் போலீசுக்கு வளைகாப்பு! நெகிழ வைத்த சக காவலர்கள்!

அண்ணா சாலை காவல்நிலையத்தில் பெண் காவலருக்கு வளைகாப்பு ..


சென்னை: சென்னை, அண்ணா சாலை காவல்நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவலராக ஷில்பா பணியாற்றி வருகிறார். இவர், 7 மாத கர்ப்பிணி. இந்நிலையில் அண்ணா சாலை சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், காவல்நிலைய வளாகத்திலேயே வளைகாப்புக்கான ஏற்பாடுகளை செய்தார்.

இதில், காவல்நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலர்கள் மற்றும் காவலர்கள் வீடுகளில் நடப்பது ேபான்று குத்துவிளக்கு ஏற்றி, நலங்கு வைத்து, மாலை அணிவித்து ஷில்பாவை இருக்கையில் அமர வைத்தனர்.

பிறகு சந்தன நலங்கிட்டு வளையல்களை அணிவித்து விழா சிறப்பாக கொண்டாடினர். அப்போது இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், சீர்வரிசை கொடுத்தார். இந்த நிகழ்வு பெண் போலீசாரிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.