உடல் முழுவதும் மரக்கட்டையாக மாறி வரும் விநோத மனிதன்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!

கைகள் முழுவதும் மரக்கட்டைகள் போல மாறி வருவதால், செயற்கை கரங்கள் பொருத்தும்படி வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.


வங்கதேசத்தைச் சேர்ந்த அபுல் பஜேந்தர் என்ற 28 வயது இளைஞனுக்கு, கடந்த 2016ம் ஆண்டு முதலாக ஒருவித சிண்ட்ரோம் குறைபாடு நோய் ஏற்பட தொடங்கியது. அதாவது, கைகள் முழுக்க செடிகள் வளர்வது போல, வளர்ந்து பார்ப்பதற்கு விரல்களும், உள்ளங்கையும் அப்படியே மரக்கட்டை போலவே மாறிவிட்டன. இதைச் சரிசெய்வதற்காக, இதுவரை 25 அறுவை சிகிச்சைகளை அபுல் பஜேந்தர் செய்திருக்கிறார். ஆனாலும், இந்த குறைபாடு தீரவில்லை. அத்துடன், கடும் வலியும், அரிப்பும் சேர்ந்து அவரை பாடாய் படுத்தி வருகிறது.

இந்த வலி தாங்காமல், கடந்த ஜனவரி மாதம் மீண்டும் டாக்கா மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு, எபிடெர்மோடிஸ்பிளேசியா வெர்ருசிஃபார்மிஸ் எனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இது அரிய வகை நோய் எனவும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். பஜேந்தரை, வெளிநாட்டுக்கு அனுப்பி, தரமான சிகிச்சை அளித்து குணப்படுத்த மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர். அதேசமயம், வறுமை குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால், தனக்கு யாரேனும் உதவி செய்தால் நலமாக இருக்கும் என்று பஜேந்தர் கோரிக்கை விடுத்துள்ளார். 

இவரைப் பற்றிய செய்தி, வங்கதேச ஊடகங்களில் வெளியாக, தற்போது, அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா உதவிக்கரம் நீட்டியுள்ளார். இந்த நவீன காலத்தில் இத்தகைய நோய் ஏற்படுவதை அனுமதிக்கக்கூடாது என்றும், சக மனிதனாய் நின்று பஜேந்தருக்கு தேவையான உதவியை வங்கதேச அரசு செய்துதரும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். 

பஜேந்தரின் புகைப்படத்தை பார்க்கவே நமக்கு மிக மன உளைச்சலாக உள்ளது. ஆனால், அப்படிப்பட்ட நோயுடன் வாழும் அவரின் உள்ளம் எத்தகைய வேதனை கொண்டிருக்கும்? அவர் விரைவில் நோயிலிருந்து மீண்டு வர பிரார்த்திப்போம்...