பைக்கில் காதலியை கீழே உட்கார வைத்து காலை தூக்கி காதலன் செய்த விபரீதம்! வைரல் வீடியோ உள்ளே!

பெங்களூரில் புறநகர் பகுதியின் ரோட்டில் அதிவேகத்தில் தனது காதலியுடன் சென்ற இளைஞர் மோட்டார் சைக்கிளில் சாகசங்களில் ஈடுப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் பெரும் வைரலாகி வருகிறது...


பெங்களூரை அடுத்த  தேவனஹள்ளி ரோட்டில்  அதிவேகத்தில் மோட்டார் பைக்கை ஓட்டிய வாலிபர். தனது காதலியை பின்புறம் உட்கார வைத்துக்கொண்டு மிக பாதுகாப்பற்ற  முறையில் சாகசம் செய்துள்ளார். அதாவது, மோட்டார் பைக் வேகமாக சென்றபோது அந்த வாலிபர், பைக்கின்  முன்சக்கரத்தை மேல்நோக்கி தூக்கி வீலீங் செய்தும், முன்சக்கரத்தை மேல்நோக்கி தூக்கியபடி செல்லும் பைக்கின் மீது இருக்கைக்கு மேல் எழுந்து நின்ற வாலிபர் பின்னர், தன்னுடைய ஒரு காலையும் மேல் நோக்கி தூக்கியபடி சிறிது தூரம் பைக்கில் வேகமாக செல்கிறார்.

பைக்கின் பின்புறம் அமர்ந்திருக்கும் அவருடைய காதலியும் வாலிபரை இறுக்கப்பிடித்து கொண்டு கத்தி அலறினார். இதனை அவர்களுக்கு பின்னால் ஸ்கூட்டரில் வந்த ஒருவர் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். சம்பவத்தை நேரில் பார்த்துவர்களை மிரளவைக்கும் வகையில் இருந்தது அந்த காட்சிகள்.

இந்த சாகச வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது மிக வைரலாகி வருகிறது. இதற்கு பல தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யவுள்ளதாக  தகவல் வெளியானதை அடுத்து சம்மந்தபட்ட நபரை போலீசார் தேடிவருகின்றனர்.