முழுசா எடப்பாடி பழனிசாமியின் ஸ்லீப்பிங்செல்லா மாறுன பெங்களூர் புகழேந்தி, டென்ஷனில் தினகரன்!

தினமும் ஏதேனும் ஒரு வகையில் தினகரனுக்கு குடைச்சல் கொடுப்பதுதான் தன்னுடைய ஒரே வேலை என்று செயல்பட்டு வருகிறார் பெங்களூர் புகழேந்தி.

கோவையில் பெங்களூர் புகழேந்தி நடத்திய கூட்டத்திற்கு கோவை மாநகர் மாவட்ட அவைத்தலைவர் குணசேகரன் முன்னிலை வகித்தார். இந்தக் கூட்டத்தில் புகழேந்தி பேசிய பேச்சுக்கள்தான் தினகரனை கடும் டென்ஷனுக்கு உள்ளாக்கியிருக்கிறது. 

தினகரனை திட்டியதைவிட எடப்பாடிக்குப் பாராட்டு தெரிவித்ததுதான் அதிகம். ஆம், நதிநீர் பிரச்சினையை தீர்க்க கேரள முதல்-மந்திரியை சந்தித்து பேசிய தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவிக்கப்பட்டது. நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கும் பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் தினகரனுக்கு தலைவருக்கு உரிய பக்குவம் இல்லை. அதனால்தான் அவருடன் இருந்தவர்கள் பலர் வெளியேறி விட்டனர். மேலும் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியபோது அதற்காக எந்த நடவடிக்கையையும் டி.டி.வி.தினகரன் எடுக்கவில்லை.

உடன் இருந்த 18 எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிபோக காரணமாக இருந்த அவர், உடனடியாக தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளார். சசிகலாவின் பணத்தை தின்கரன் எப்படி விரயம் செய்தார் என்பது எனக்கு தெரியும். எனவே அவருடைய குடுமி எனது கையில் உள்ளது.

எனவே எப்போது சொல்ல வேண்டுமோ அப்போது கண்டிப்பாக வெளியே சொல்வேன். இனிமேல் டி.டி.வி.தினகரனால் சசிகலாவிடம் பணம் வாங்க முடியாது. சிறையில் இருக்கும் சசிகலா வெளியே வந்தால் அவர் அ.தி.மு.க.வை தான் ஆதரிப்பார் என்பது எனது கருத்து. அவர் கட்சி மற்றும் ஆட்சியை காப்பாற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தவர்.

எம்.ஜி.ஆர். தோற்றுவித்த அ.தி.மு.க.வை ஜெயலலிதா வளர்த்தார். ஆனால் டி.டி.வி.தினகரன் இரட்டை இலை சின்னத்தை கொச்சைப்படுத்தி வருகிறார். எம்.ஜி. ஆரும், ஜெயலலிதாவும் கட்சியை வளர்க்க அரும்பாடுபட்டனர். எனவே அந்த கட்சிக்கும், ஆட்சிக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படாமல் நாங்கள் பார்த்துக்கொள்வோம். அ.தி.மு.க. ஆட்சியை காப்பாற்ற சிப்பாய்களாக செயல்படுவோம் என்று பேசியிருக்கிறார் புகழேந்தி.

இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலை, நசுங்குகப்பா…