கட்டிப்பிடித்து கசக்கிய காமுகர்கள்..! கதறிய இளம் பெண்கள்.! புத்தாண்டு கொண்டாட்டத்தில் அரங்கேறிய விபரீதம்!

பெங்களூரு: நள்ளிரவு 12 மணி வரை காத்திருந்து, புத்தாண்டு பிறந்ததும் இளம்பெண்களை சிலர் பாலியல் சீண்டல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பெங்களூருவில் உள்ள எம்ஜி ரோடு, பிரிகேட் ரோடு, கோரமங்களா போன்ற இடங்களில் ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டு பிறப்பு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். அங்கு ஆண், பெண் என ஏராளமானோர் கூடி உற்சாகமாக ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி புத்தாண்டு வாழ்த்து பரிமாறிக் கொள்வார்கள். இந்நிலையில், 2020 புத்தாண்டு பிறந்த இரவை முன்னிட்டு பெங்களூருவில் இளம்பெண்களை குறிவைத்து சிலர் பாலியல் சீண்டல் செய்துள்ளனர்.  

கோரமங்களா 5வது பிளாக்கில் ஆண்கள், பெண்கள் ஒன்று கூடி புத்தாண்டை வரவேற்றபோது, கும்பலில் இருந்த சிலர் இளம்பெண்களின் உடல் உறுப்புகளில் கை வைத்து பாலியல் சீண்டல் செய்துள்ளனர். கூட்டமாக இருந்ததாலும், பட்டாசு வெடித்தது போன்ற காரணங்களாலும் இளம்பெண்களின் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை.

இதனை பயன்படுத்தி, நைசாக முடிந்த வரை இளம்பெண்களை பாலியல் சீண்டல் செய்துவிட்டு, அந்த நபர்கள் வெளியேறிவிட்டனராம். நீண்ட நேரம் அப்பகுதியில் இருந்த இளம்பெண்களை சுற்றி சுற்றி வந்து, இப்படி தொந்தரவு செய்த அந்த நபர்கள் பற்றி, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்குச் சில இளம்பெண்கள் புகார் செய்தனர். இதன்பேரில் அங்கு வந்த போலீசார், சிசிடிவி கேமிரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.