பெங்களூரு: தன் மீது சந்தேகப்பட்டு, 22 ரகசிய கேமிரா வைத்திருந்த கணவனை கிரிக்கெட் பேட்டால் அடித்து மண்டையை உடைத்துள்ளார் இந்த பெங்களூரு பெண்.
வேறு ஒருவனுடன் உல்லாசம்! மனைவியை கண்காணிக்க வீட்டில் 22 சிசிடிவி கேமரா! கணவனுக்கு பிறகு நேர்ந்த விபரீதம்

இதுபற்றி டைம்ஸ் நவ் வெளியிட்ட செய்தியில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த பெயர் வெளியிடப்படாத ஒரு காதல் ஜோடி, 2007 முதல் பழகி வந்துள்ளனர். இதன்பேரில், முதலில், அந்த ஆண் தனது காதலை வெளிப்படுத்த, அதனை அந்த பெண் நிராகரித்துவிட்டாராம். பின்னர், 3 ஆண்டுகள் விடாப்பிடியாக, அந்த ஆண் துரத்தி காதலிக்க, அதனை இறுதியாக, அப்பெண் ஏற்றுக் கொண்டிருக்கிறார். இதன்பேரில் இருவரும் 2010ம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டுள்ளனர். அவர்களுக்கு, ஒரு மகனும் பிறந்துவிட்டான்.
இந்நிலையில், மகனின் ஜாடை தன்னைப் போல இல்லை எனக் கூறி, சந்தேகமடைந்த கணவன், தனது மனைவியை ரகசியமாக கண்காணிக்க தொடங்கியுள்ளார். இதன்பேரில், பல்வேறு இடங்களிலும் 22 ரகசிய கேமிராக்களை பொருத்திய அவர், பிரைவேட் டிடெக்டிவ் ஒருவரையும் பணிக்கு நியமித்துள்ளார்.
இந்த கேமிராக்களில் இருந்து வரும் காட்சிகள் அனைத்தையும், தனது செல்ஃபோன் மூலமாக இணைத்து, அவர் கண்காணித்து வந்திருக்கிறார். ஒருமுறை, பெண்ணின் உறவுமுறை இளைஞர் வீட்டிற்கு வந்தபோது, கணவர் வீட்டில் இல்லை. ஆனால், அவர் யார் என்று குறிப்பாக கணவர் விளக்கம் கேட்க, மனைவிக்கு சந்தேகம் வலுத்துள்ளது. இதன்பேரில், மனைவி யோசித்தபோது, தனது கணவர் தன்னை பலவிதங்களில் கண்காணிப்பதை கண்டுபிடித்துள்ளார்.
இதுபற்றி கணவனிடம் கேட்டபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த மனைவி, கிரிக்கெட் பேட்டால், கணவனின் மண்டையை உடைத்தார். பிறகு, பெண்களுக்கான அவசர உதவி எண்ணை தொடர்புகொண்டு, இந்த விசயத்தை தெரிவித்தார். இதன்பேரில், அந்த பெண்ணின் கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்பெண்ணிற்கு, மனநல சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.