பெங்களூரு: சிறப்பு பூஜை செய்வதாகக் கூறி, பெண் ஒருவருக்கு, பூசாரி பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
2 பூஜைகள் செய்தால் எல்லாம் சரியாகிவிடும்! சாமியரால் திருமணமான பெண்ணுக்கு நேர்ந்த விபரீத அனுபவம்!

பெங்களூருவில் உள்ள பானஸ்வாடி பகுதியில்தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட பிரச்னைகளை சரிசெய்வதற்காக, குறிப்பிட்ட பெண், அந்த பூசாரியை நாடியுள்ளார். அவர், இதற்காக 2 சிறப்பு பூஜை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இதற்கு அந்த பெண் ஒப்புக் கொள்ளவே, முதல் பூஜையை வீட்டில் வைத்து, செய்த பின், 2வது பூஜை செய்வதற்காக, குக்கே சுப்பிரமணிய கோயிலுக்கு பூசாரி அவரை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, திடீரென அந்த பெண்ணை பாலியல் ரீதியாக, பூசாரி தொல்லை செய்துள்ளார்.
தனது ஆசைக்கு இணங்கினால்தான் பூஜை நிறைவேறும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால், அவரிடம் இருந்து தப்பித்த, அப்பெண், போலீசில் இதுபற்றி புகார் அளித்தார்.
இதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.