என்னது பிரேக் பிடிக்க மாட்டுதா..! ஸ்டியரிங்க என்னுட்ட கொடுங்க..! அரசு பஸ்சை அசால்ட்டாக ஓட்டிய பெண் IAS அதிகாரி! ஏன் தெரியுமா?

பெங்களூரில் பேருந்துகளில் அடிக்கடி பிரேக் ஃபெயிலியர் ஏற்படுகிறது என்ற பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் அரசு பேருந்தை தானே ஓட்டி சென்று சோதனை செய்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. மேலும், மிகுந்த பாராட்டையும் பெற்றுள்ளது.


பெருநகர பெங்களூரில் உள்ள பிஎம்டிசி பேருந்துகளில் சில நாட்களாகவே அடிக்கடி பிரேக் ஃபெயிலியர் ஏற்படுகிறது என்றும், இதனால் விபத்துக்களை நிறைய சந்திக்க நேரிடுகிறது என்றும் பொதுமக்கள் தரப்பில் கூறப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் ஷிகா அவர்கள் பேருந்துகளில் பிரேக்குகள் சரியாக இருக்கிதறா என்பதை யாரிடமும் கேட்டு தெரிந்து கொள்ள முயலவில்லை.

மாறாக தானே களத்தில் இறங்கி நடவடிக்கை எடுக்க முயன்றார் . அதன் காரணமாக ஹோஸ்கோட் பயிற்சி மையத்திற்கு ஷிகா ரெட் கலர் சுடிதாரில் வந்தார். 

அங்கு ஏராளமான பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதில், வால்வோ பேருந்து ஒன்றில் ஏறி டிரைவர் சீட்டில் உட்கார்ந்தார். கியரை போட்டு பேருந்தை ஓட்ட ஆரம்பித்தார். பிரேக் சரியாக பிடிக்கிறதா என்று தானே நேரடியாக சரிபார்த்தார். இதை பார்த்த பிஎம்டிசி அதிகாரிகளும் ஊழியர்களும் பார்த்து ஆச்சரியமடைந்தனர்.

பின்னர் இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் பெண் ஐஏஎஸ் அதிகாரியை பொதுமக்கள் மிகுந்த பாராட்டையும் பெற்று வருகிறார்.