நான் அவருக்கு முத்தம் கொடுக்கும் போது இங்க பார்க்காதீங்க..! காதலனுடன் இருந்த தாய் குழந்தைகளுக்கு அதிர்ச்சி அட்வைஸ்..!

பெங்களூரு: கள்ளக்காதலனுக்கு முத்தம் கொடுத்த தாய்க்கு எதிராக மகளே சாட்சியம் சொன்ன சம்பவம் வேதனை அளிப்பதாக உள்ளது.


இதுதொடர்பாக, பெங்களூருவைச் சேர்ந்த கணவன் - மனைவி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்களுக்கு பருவ வயதில் 2 மகள்கள் உள்ள நிலையில் அவர்களை தங்களுடன் சேர்ந்து வாழக் கோரி இருவருமே நீதிமன்ற அனுமதி கோரினர்.  

முதலில் 2013ம் ஆண்டு இதுபற்றி விசாரித்த உயர் நீதிமன்றம், தந்தையுடன் சேர்ந்து வாழ, மகள்களை அறிவுறுத்தியது. காரணம், தங்களது கண் முன்பாகவே, தாய் கள்ளக்காதலனை அழைத்து வைத்து சில்மிஷம் செய்வதாக, சாட்சியம் கூறினர். இதேபோல, ஒருநாள் உறங்கிக் கொண்டிருந்த கணவனை மண்ணெண்ணெய் ஊற்றி தாய் எரித்துக் கொல்ல முயன்றதாகவும், அவர்கள் சாட்சியம் சொன்னார்கள்.

இதனையடுத்தே நீதிமன்றம் தந்தையுடன் சேர்ந்து வாழ, 2 மகள்களுக்கும் உத்தரவிட்டது. ஆனால், இதனை எதிர்த்து, அவரது தாய் மீண்டும் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் மீண்டும் அதே தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.  

மகள்களின் கண் முன்பே, காதலனுக்கு முத்தம் தருவதும், பாலியல் சில்மிஷம் செய்வதும் அந்த பெண்ணின் வாடிக்கையாக உள்ளது. இந்நிலை தொடர்ந்தால், மகள்களின் எதிர்காலம் பாழாகிவிடும் எனவும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. எனவே, கணவன், மனைவி பிரிந்து வாழ்வதே நலம், தந்தையுடன் மகள்கள் சேர்ந்து வாழட்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.