ஜன்னல் வழியா வந்தான்..! என் பொன்னோட டிரஸ்ஸ கழட்ட டிரை பண்ணுனான்..! காவல் நிலையத்தில் கதறிய தந்தை! பூட்டிய வீட்டில் பகீர் சம்பவம்!

பெங்களூரு: சிறுமியை பலாத்காரம் செய்வதற்காக, ஜன்னல் கதவை உடைத்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


பெங்களூருவில் உள்ள பெல்லாந்துர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், தனது வீட்டின் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 9 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதன்படி, சனிக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் பலவந்தமாக பாதுகாப்பை மீறி, ஜன்னலை உடைத்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்திருக்கிறார். பிறகு, சிறுமியை தனிமைப்படுத்தி உடைகளை அவிழ்க்க முயன்றபோது, அந்த சிறுமி சத்தம் போட்டுள்ளார். உடனடியாக அந்த நபர் மீண்டும் ஜன்னல் வழியாக தப்பியோடிவிட்டார்.  

இதுபற்றி சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்யவே, போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். குறிப்பிட்ட நபரை சிசிடிவி கேமிரா காட்சிகளின் அடிப்படையில் தேடி வருவதாக, போலீசார் தெரிவிக்கின்றனர்.  

இன்றைய சூழலில், வீட்டினுள் பூட்டி வைத்தாலும் காமக்கொடூரர்களிடம் இருந்து சிறுமிகளை பாதுகாக்க முடியவில்லை என்று, பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.